தேயிலை உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி

கடந்த மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 22.7% ஆல் குறைந்துள்ளது. இது 18.5 மில்லியன் கிலோகிராம் தேயிலை என கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேயிலை உற்பத்தி 17.8% ஆல் குறைந்துள்ளது. மேலும் மலையக தேயிலை உற்பத்தி 31.6% ஆலும், தாழ்நில தேயிலை உற்பத்தி 16.6% ஆலும் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா மீண்டும் நியமனம்

திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா 2022 யூலை 27 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் ஆறு ஆண்டுகாலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர், 2016 யூலை தொடக்கம் 2020 மே வரையிலும் 2022 மே தொடக்கம் 2022 யூலை வரையிலும் நாணயச் சபையில் பணியாற்றியிருந்தார். இவர் கொழும்பு, இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து தனது விஞ்ஞானமானிப் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய வங்கியாளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினரும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய … Read more

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் செயலாளர் நாயகம் அழைப்பு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் கௌரவ ஜனாதிபதி அவர்களால் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதால் அந்நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பது தொடர்பான பின்வரும் ஆவணங்களை பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.parlaiment.lk) பதிவேற்றம் செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது … Read more

கிம்புலா எலே குணாவின் கையாட்கள் கையாட்கள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட, குற்றவாளி கும்பல் ஒன்றின் தலைவரான தற்போது வெளிநாட்டில் வசிக்கும், சின்னையா குணசேகரம் அதாவது கிம்புலா எலே குணா என்று அழைக்கப்படுபவரின் போதைப்பொருள் கையாட்கள் இருவர் வத்தளை பள்ளியவத்தை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 06 கிலோ 440 கிராம் கேரள கஞ்சா, 05 கிராம் 300 … Read more

அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான சுற்றறிக்கை

இலங்கை அதிபர் சேவையில் மிகை ஊழியர் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு தரம் 2, தரம் 3 ல் சேர்த்துக் கொள்ளப்பட்ட அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். அரசாங்க சேவை ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய பதவி உயர்வு வழங்குவதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கை அதிபர் சேவையின் மிகை ஊழியர் அடிப்படையில் 2012.08.08 ஆம் திகதி நியமனம் செய்யப்பட்ட 3,200 அதிபர்கள் இவ்வாறு பதவி உயர்வை பொறுவார்கள். இலங்கை அதிபர் … Read more

கடத்தப்பட்டதாக பொய் கூறிய குற்றச்சாட்டின் பேரில் விமானப்படை அதிகாரி கைது

இனந்தெரியாத குழுவொன்றால் தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அக்குழுவினர் தன்னை கொலை செய்ய முற்பட்டதாகவும்  பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக விமானப்படை அதிகாரி ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றியவர் எனவும் அவர் வாழைச்சேனை, ரிதியத்தன்னவில் நேற்று காலை (28) மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட போது பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து  விமானப்படை அதிகாரியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.  அவரை கடத்தி வைத்திருந்ததாக சொல்லப்படும் … Read more

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான பொருளாதார நிலையங்களின் நுழைவாயிலை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 21 போராட்டக்காரர்களின் வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாகத் தடை செய்யுமாறு நேற்று (28) பிற்பகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, கோட்டை பொலிஸ் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக … Read more

உண்டியல் முறையின் ஊடாக வெளிநாட்டு நாணயங்களை பரிமாற்றும் ஒருவர் கைது

16.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயங்களுடன், உண்டியல் முறையின் ஊடாக நாணயங்களை பரிமாற்றும் ஒருவர் வெலிகம பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்மாதுவ உப முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கல்பொக்க பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வெலிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்கள் உயர் முன்னேற்றத்தை அடைந்துள்ளன…  

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்து, சிறந்த பொருளாதார நடைமுறையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்கள் உயர் முன்னேற்றத்தை அடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தை அடைந்துகொள்ள வேண்டுமாயின், கடன் நிலைபேற்றுத்தன்மை குறித்து முறையானதொரு திட்டம் முன்வைக்கப்பட வேண்டி இருந்தது. கடந்த காலத்தில் காணப்பட்ட ஸ்திரதன்மையற்ற அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படாத முன்னைய அரசாங்கத்தின் அரசியல் கொள்கை … Read more

தாக்குதலுக்கு உள்ளான விமானப்படை வீரரின் நடிப்பு அம்பலம்: விமானப்படை விளக்கம்

“விமானப்படை வீரர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. விமானப்படையின் கோப்ரலான பீ. ரத்னசூரிய மரம் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் அது குறித்து வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். பொலிஸார் விமானப்படை கோப்ரலை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். அவர் கட்டப்பட்ட மரத்தில் “ முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழிலில் எழுப்பட்ட பதாகை … Read more