வெள்ளவத்தை ,புகையிரத விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

வெள்ளவத்தையில் நேற்று இரவு (28) ஓடும் ரயிலில் மோதி 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புகையிரதம் கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது, புகையிரதத்தில் இரண்டு யுவதிகளும் மோதியதை தொடர்ந்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் மேலும் இரண்டு பெண்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக … Read more

826 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் QR குறியீட்டை நடைமுறைப்படுத்தக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 713 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. நேற்றைய (28) தினம் 536 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. அதன் ஊடாக 1,87,005 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது. அத்துடன், நேற்று மாத்திரம் 1,63,544 பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். நேற்று இரவு 8:30 மணியளவில் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, … Read more

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவருவது எவ்வாறு இடம்பெறுகின்றது?

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 2022 ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.  வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகும். பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடப்புப் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டமையைக் காணமுடியும். இவ்வாறு பாராளுமன்றத்தின் … Read more

எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

 மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (29) அதிகாலை எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற வாகனங்களை காட்டு யானை சேதப்படுத்தியது. வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் இரண்டு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மற்றைய வண்டிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

பாடசாலைகளுக்கு விடுமுறை கிடையாது! கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலைகள் தொடரும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடத்தும் நடைமுறை விரைவில் நீக்கப்படும் எனவும் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் தெரிவித்தார். விசேட கல்வித் திட்டங்கள்  இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புடன் 24 பிரதான பாடங்களுக்கான … Read more

அதிபர், ஆசிரியர்களுக்கு எரிபொருள்

வாழைச்சேனை மத்திய பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் (28) அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேச பாடசாலைகள் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைய பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டது. கூட்டுறவு சங்க தலைவர் எம். ஜௌபரின் தலைமையில் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக உதவித் திட்மிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைதின் மேற்பார்வையில் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர் கைதுகள்! அமைதி போராட்டத்திற்கு தயாராகும் காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள்(Video)

காலி முகத்திடலில்  முன்னெடுக்கப்பட்டு வரும்  போராட்டக்களத்தில் நாளுக்கு நாள் மக்களின் வருகை குறைவடைந்து வருகின்றது.  புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கைதுகள் காரணமாக இவ்வாறு மக்களின் தொகை குறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.  காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தில் ஆரம்ப நாள் தொடக்கம் செயற்பட்டு வந்த முன்னணி செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் கைது செய்யப்படவுள்ளனர்.  அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு தயார்.. இந்த நிலையில், குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முன்னணி செயற்பாட்டாளர்களுக்கு  ஆதரவு தெரிவித்தும் தற்போது  … Read more

பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

இங்கையிலுள்ள பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் லங்கா ஐ ஓ சி நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் திரு குப்தா மற்றும் அவரது அதிகாரிகளுக்கும் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று (29) அமைச்சில் நடைபெற்றது. டொலர் மற்றும் இலங்கை பணத்தில் படகுகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உதவ வேண்டும் என்று படகு … Read more

தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு வரவேற்பு – நன்னீர் இறால் வளர்ப்பு விடயங்களை மேம்படுத்த வேண்டும் : கடற்றொழில் அமைச்சர்

தாய்லாந்து முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ள வகையில் நன்னீர் மற்றும் இறால் வளர்ப்பு விடயங்களை மேம்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தாயலாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் போஜ் ஹெர்பல் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு செயற்திட்டங்களை மேலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்னெடுப்பதற்கான இருதரப்பு … Read more

வீட்டுத் தோட்டச்செய்கை: ஊக்குவிக்கும் நடவடிக்கையில் கிழக்கு பல்கலைக்கழகம்

கிழக்குப் பல்கலைக்கழக விவசாயி பீடத்தினுடைய பல்கலைக்கழக பண்ணை மற்றும் பேண்தகு விவசாயத்திற்குமான மூலவள முகாமைத்துவ நிலையத்தினர் மற்றும் விவசாய திணைக்குளத்தினுடைய மட்டக்களப்பிற்கான விரிவாக்கபிரிவினர்; இணைந்து தோட்டச்செய்கையினை ஊக்குவிக்கும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அதற்கு அமைவாக மட்டக்களப்பு ஊறணி மற்றும் மஞ்சந்தொடுவாய் போன்ற கிராமங்களில் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு வீட்டுத் தோட்டச்செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக கத்தரி மற்றும் மிளகாய் கன்றுகள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் விவசாயப் பீடத்தினுடைய பீடாதிபதி, பேண்தகு விவசாயத்திற்கான மூலவள முகாமைத்துவத்திற்கான நிலையத்தின் பணிப்பாளர்கள், … Read more