ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க அவர்கள் தமது கடமைகளை ஆரம்பித்தார்…

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்ட சாகல ரத்நாயக்க அவர்கள், இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட, ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி … Read more

மர்ஹீம் அஸ்ரப்பின் கனவை நிறைவேற்றினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டுக்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீண்டும் இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்து மறைந்த மர்ஹும் எம் எச் எம் அஷ்ரப்பின் முயற்சியினால் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டது. ஒரு பக்கம் வர்த்தக துறைமுகமாகவும் மறுபக்கம் மீன்பிடித் துறைமுகமாகவும் இரு பயன்பாடுகளைக் கொண்டதாக துறைமுகம் அமைக்கப்பட்டது. காலத்திற்கு காலம் கடலரிப்பு மற்றும் மணல் நிறைதல் போன்ற காலநிலை … Read more

அத்தியாவசிய பொருட்களை புகையிரதம் மூலம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்துவர நடவடிக்கை

யாழ் மாவட்டத்துக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை கொழும்பிலிருந்து எடுத்து வரவும், யாழ்ப்பாணத்திலிருந்து உணவு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான புகையிரத சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ் வணிகர் கழகம் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கமைய,கடந்த 30.06.2022 அன்று என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்துக்கு அமைவாக, திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இலங்கை புகையிரத துறையிடம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார். யாழ் – கொழும்புக்கிடையிலான புகையிரத … Read more

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் கோரிக்கை மாற்றம் ஒன்று வேண்டும் என்பதாகும்….அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்… ஜனாதிபதி

நாட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். நேற்று (27) பிற்பகல் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மாளிகையில் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி … Read more

இலங்கையை நோக்கி பயணிக்கும் சீனாவின் ஆய்வு கப்பல்! தீவிர கண்காணிப்பில் இந்தியா

சீனாவின் அறிவியல் ஆய்வு கப்பல் யுவான் வாங்-5 ஆகஸ்ட் 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா தனது தெற்கு பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிர கண்காணிப்பில் இந்தியா இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் தொலைக்காட்சியை நடத்துவதற்காக சீன அறிவியல் ஆய்வுக் கப்பல் யுவான் வாங்-5 சீனாவின் 99 வருட குத்தகை கட்டுப்பாட்டில் … Read more

ரணில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – வசந்த முதலிகே

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்களுக்கான போராட்டம் காலி முகத்திடலில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டக்காரர்களுக்காக இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் பொது பிரதிநிதிகள் கூறுவது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட … Read more

ஜனாதிபதி ரணிலுக்கு மக்கள் ஆசிர்வாதம் இல்லை – ராஜித சேனாரத்ன

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வரும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளது. அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களின் ஆசிர்வாதம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் போது, ​​அதன் வேர் மக்கள் சார்புடையதாக இருக்க வேண்டும், அந்த வேர் மக்கள் விரோதமாக … Read more