அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த டீசல்

சட்டவிரோதமான முறையில் 1900 லீற்றர் டீசல் பதுக்கி  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஹம்பாந்தோட்டை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (25) இரவு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குறித்த டீசல் தொகை, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. இந்த டீசல் தொகையை பதுக்கி வைத்திருந்த நபர் கைது … Read more

வவுனியாவில் சிறுபோக நெல் அறுவடைக்கு 70,000 லீற்றர் டீசல்

வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடையை மேற்கொள்வதற்காக,70,000 லீற்றர் டீசலை எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை எரிசக்கதி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு இணைந்து மேற்கொண்டுள்ளன. சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்ட அறுவடையை ஆரம்பித்துள்ள 20 கமநலசேவை பிரிவுகளுக்கு இன்று (27) இவ்வாறு டீசல் வழங்கப்படுவருகின்றன.  6750 ஏக்கர் நெற்பயிர் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதாகவும் மிகுதி அறுவடைக்குத்தேவையான டீசல் கமநலசேவை பிரிவுகளுக்கு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்ர தெரிவித்துள்ளார்.

நல்லூர் மஹோற்சவம் ,இம்முறை வழமைபோன்று – யாழ் மாநகர முதல்வர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் ,இம்முறை வழமைபோன்று இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆகஸ்ட் … Read more

கடவுச்சீட்டு பெறுவதற்கான நடைமுறையில் மாற்றம்

திகதியை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இன்று (27) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அவசர கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக தனியான கரும பீடம் ஒன்று ஒதுக்கப்படும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து தொடர்ச்சியாக இலங்கைக்கு கிடைக்கும் உதவிகள்: சீன தூதரகம் வெளியிட்ட தகவல்

சீனாவிடம் இருந்து மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் மேலும் இரண்டு 500 மெட்ரிக் டன் அரிசி தொகுதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அனுப்பப்பட்ட இரண்டு 500 மெட்ரிக் டன் அரிசி தொகுதிகள் ஜூலை 16 மற்றும் 19 ஆம் திகதிகளில் கொழும்பை வந்தடைந்துள்ளன. ‘இதுவரை, பாடசாலை உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் உள்ள 7,900 பாடசாலைகளில் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் அரிசி கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ … Read more

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ,மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்  

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் … Read more

அவசர கால நிலை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரகடணப்படுத்தப்பட்ட அவசர கால நிலை குறித்து பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது. 2022 ஜூலை 17 ஆம் திகதிய 2288/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அப்போதைய பதில் ஜனாதிபதியினால் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது. சட்ட விதிகளுக்கு அமைய … Read more

ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு

ரணில் விக்ரமசிங்க தனது வெற்றிக்காக ராஜபக்ச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பியிருப்பதாலும், ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்பட்டதற்காக எதிர்ப்பாளர்களால் கண்டனம் செய்யப்பட்டதாலும், புதிய ஜனாதிபதி ஜனநாயகத்தின் முகவராக இருப்பாரா என்ற சந்தேகம் நீடித்து வருகிறதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்படும் சந்தேகங்கள் கொழும்பின் பிரதான எதிர்ப்பு முகாமை வன்முறையில் அகற்றுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரை விக்ரமசிங்க பயன்படுத்தியமை மற்றும் பல ராஜபக்ச விசுவாசிகளை அமைச்சரவையில் அவர் நியமித்தமை இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளது, பதற்றங்களை எழுப்பியுள்ளது. அரசியல் சீர்திருத்தங்கள் … Read more

புதிய ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது: அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயக வழிமுறைகள்,நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் … Read more