இந்திய மக்களிடமிருந்து 22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிப்பொருட்கள்

இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3.4 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிப்பொருட்களை வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரி, சுகாதாரத் துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் 2022 ஜூலை 26 ஆம் திகதி கொழும்பில் கையளித்தார். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.  … Read more

வாழைச்சேனையில் இடி மின்னல்: வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று (25) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற இடி மின்னல் காரணமாக ,பிரதேசத்தில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளன. வாழைச்சேனை விநாயகபுரத்தில் பிற்பகல் வேளையில் இரண்டு வீடுகளில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்களில் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதனால் தீ பற்றியுள்ளது. தீ வீட்டின் கூரையின் மீது பரவியதனையடுத்து சம்பவம் அறிந்த அயலவர்கள் தீ பரவாமல் தடுத்துள்ளனர். இதேவேளை ,குறித்த வீடுளில் வசித்தோர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை ஆனால் குறித்த … Read more

கிழக்கு ,ஊவா மாகாணங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூலை26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு   2022 ஜூலை 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா … Read more

கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஜூலை 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் … Read more

இலங்கை அரசாங்கத்தால் மீளவும் கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது

நேற்றைய தினம் செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர் சர்வதேச கடனை இலங்கை அரசாங்கத்தினால் செலுத்த முடியாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை 2012 இல் பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட சர்வதேச இறையாண்மைப் பத்திரம் நேற்றைய நிலவரப்படி முதிர்ச்சியடைந்துள்ளது. எனினும், டொலர் நெருக்கடி காரணமாக இலங்கையால் அதனை செலுத்த முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, வெளிநாட்டு உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றை செலுத்தப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அண்மையில் … Read more

இலங்கைக்குள் குரங்கு அம்மை தொற்று பரவும் ஆபத்து – வைத்தியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை

குரங்கு அம்மை வைரஸ் தொற்று என்பதால் நாட்டிற்குள் நுழைவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார். புதுடெல்லியைச் சேர்ந்த 31 வயதான ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கடந்த 24ம் திகதி கண்டறியப்பட்டதை அடுத்து வைத்தியர் ஜீவந்தராவை ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டபோது கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், குரங்கு அம்மை வைரஸ் தொற்று என்பதால் இந்நோய் … Read more

ரயில்வே திணைக்களத்திற்கு 2 கோடி ரூபா இழப்பு

புகையிரத பயணச்சீட்டுக் கட்டண அதிகரிப்பு பிரச்சினைக்குரியது என குற்றம் சுமத்தி, புகையிரத நிலைய அதிகாரிகள் நேற்று முன்தினம் (23) மாலை ஆறு மணி முதல் ஆரம்பித்த வேலை நிறுத்த நடவடிக்கை நேற்று (24) பிற்பகல் இரண்டு மணியுடன் நிறைவடைந்தது. இந்த காலக்கட்டத்தில் பயணச்சீட்டு வழங்கப்படாமல், 80க்கும் மேற்பட்ட ரயில்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் இலவசமாக பயணம் செய்ததால், ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் இரண்டு கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் … Read more

ஜனாதிபதி மாளிகையிலிருந்து திருடப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை பொருட்களை விற்ற மூவர் கைது

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, அங்கு திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட 40 பித்தளை உருண்டைகளை திருடி விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்கள் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று (24) பிற்பகல் வெலிக்கடை ஒபேசேகரபுர பிரதேசத்தில் உள்ள பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றுக்கு இந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்றுள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரும் … Read more