8 இலட்சம் பெறுமதியுள்ள எரிபொருட்களுடன் ஒருவர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி 8 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுள்ள எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று (6) கல்முனை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.