WhatsApp Update: இனி லிங்க் தகவல்களை தெளிவாகப் பார்க்கலாம்!

WhatsApp Update: வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாகக் கூற ஒன்றுமில்லை. ஏனென்றால், பயனர்களை கவர இடையிடையே புதிய அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் ஸ்டேடஸில் புதிய அம்சத்தை நிறுவனம் சேர்க்க உள்ளது. வெளியான தகவல்களின்படி, இணைப்பு முன்னோட்டம் இப்போது ஸ்டேடஸிலும் தோன்றும். தற்போது, ஸ்டேட்டஸில் ஏதேனும் URL அல்லது இணைப்பைப் பகிரும்போது, அந்த இணைப்பை மட்டுமே நாம் பார்க்க முடியும். ஆனால், சமீபத்திய புதுப்பித்தலுக்குப் பிறகு, கட்டைவிரல் படத்துடன் … Read more

Facebook Discontinues: 4 அம்சங்களை அதிரடியாக நிறுத்தும் பேஸ்புக்!

Facebook இன் Nearby Friends அம்சம், மக்கள் தங்களின் தற்போதைய இருப்பிடத்தை மற்ற Facebook பயனர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த ஆண்டு மே 31 முதல் இது கிடைக்காது என நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர மேலும் 3 அம்சங்கள் நிறுத்தப்படுகின்றன.

பற்களில் பாக்டீரியாவை அழிக்க நானோ பாட்கள்: இந்திய ஆராய்ச்சியாளர்களின் முன்முயற்சி

பெங்களூரு: பற்களில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல நானோ பாட்களை (Nano Bot) பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் முயற்சியை ஆய்வின் மூலம் இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி 2.0 ரோபோ, அதன் மைக்ரோ பாட்டான சிட்டி 3.0 ரோபோவை வடிவமைத்து, பயன்படுத்தும். அது போல மருத்துவ அறிவியலில் புதிய முயற்சி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக சிகிச்சைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து … Read more

பட்ஜெட் விலையில் விவோ Y01 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் and விலை

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது விவோ Y01 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். சீன தேச ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது பட்ஜெட் விலையில் இந்திய … Read more

Narzo 50 5G: ரியல்மி நார்சோவின் முதல் 5ஜி ஸ்லிம் போன்!

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தனது பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து நிறுவனம் புதிய பட்ஜெட் 5ஜி போன்களை சந்தைக்கு கொண்டு வரத் திட்டமிட்டது. அந்த வகையில், தற்போது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அறிமுகமாகும் ரியல்மி போன்களில் இரண்டு வேரியண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இது தொடர்பான பக்கம் அமேசான் ஷாப்பிங் தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 16 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் … Read more

Play Store: ஆப்பிளை தொடர்ந்து கூகுளும் நடவடிக்கை – காலியான 15 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கள்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆப்பிள், கூகுள் ஆகிய உலகின் பெரிய டெக் நிறுவனங்கள், நீண்ட நாட்களாக அப்டேட் செய்யப்படாத ஆப்ஸ் குறித்து அதன் டெவலப்பர்களுக்கு எச்சரிக்கை விடுத்தன. ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய செய்தியில், குறிப்பிட்ட காலத்திற்குள் செயலிகள் மேம்படுத்தப்படாவிட்டால் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்ஸ் அகற்றப்படும் என்று எச்சரித்துள்ளது. இப்போது, Analytics நிறுவனமான Pixalate இன் அறிக்கையானது, கூகுள் App Store , ஆப்பிள் Play Store ஆகியவற்றில் உள்ள கிட்டத்தட்ட 30% விழுக்காடு செயலிகள் அகற்றப்படும் … Read more

Google Pixel 6a: புதிய கூகுள் பிக்சல் போன் வெளியாகும் தேதி; சலுகைகள்!

சமீபத்தில் Google I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுளின் Pixel 6a ஸ்மார்ட்போன், கூகுளின் பிற ஸ்மார்ட்போன்களை விட ஒப்பீட்டளவில் மலிவானதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. நிறுவனம் தற்போது இந்த போனின் முன்பதிவை ஐரோப்பிய நாடுகளில் தொடங்கியுள்ளது. இந்த போனின் விலை உலகின் பல நாடுகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் மூலம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கூகுள் பிக்சல் 6ஏ போனில் 5ஜி இணைப்பு, டென்சார் சிப், சிறந்த கேமரா போன்றவை அம்சங்களாகப் … Read more

Elon Musk Twitter: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்விட்டர் சிஇஓ!

ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சுமார் ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து வாங்கினார். அதனைத் தொடர்ந்து, பலத்தரப்பட்ட வதந்திகள் நிறுவனத்தை சுற்றி வந்தன. ஆனால், அதற்கு செவி சாய்க்காமல் எலான் மஸ்க் தனது பாணியில் புதிய ட்விட்டுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில், அதன் தலைமை செயல் அலுவலராக இருக்கும் பராக் அகர்வால் பதவிக்கு ஆபத்து என பல வதந்திகள் உலா வந்தன. அப்படி அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டால், எவ்வளவு தொகை கிடைக்கும் என்றெல்லாம் … Read more

Vivo X80: உள்ளங்கைல சினிமா கேமரா… விவோ களமிறக்கும் எக்ஸ் 80 போன்!

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு, பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தங்களில் பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில், எப்போதும் கேமராவை தரமாகத் தரும் விவோ, இந்த முறை ஒருபடி மேலாகச் சென்று Carl Zeiss ஆப்டிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. மே 18 ஆம் தேதி வெளியாக இருக்கும் Vivo X80 ஸ்மார்ட்போனின் கேமரா தரத்தை மேம்படுத்த, சிறந்த கேமரா லென்ஸுகளை தயாரிக்கும், பிரபல ஜெர்மன் நிறுவனமான Carl Zeiss உடன் கூட்டணி அமைத்துள்ளது. தங்களின் … Read more

Starlink Broadband: 32 நாடுகளில் தடம் பதித்த ஸ்டார்லிங்க் – இந்தியாவுக்கு எப்போது?

ட்விட்டரை வாங்கிய உலக பணக்காரர்களின் ஒருவரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் , SpaceX எனும் விண்வெளி ஆய்வு மையத்தையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் பல சேவைகளை அளிக்க நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, Starlink எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. புவியின் தாழ்வான வட்டப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்களை நிறுவி, அதன்மூலம் இன்டர்நெட் சேவை வழங்குவதே இந்த நிறுவனத்தின் திட்டம். பல ஆயிரம் செயற்கைக்கோள்களை நிறுவி, தற்போது ஸ்டார்லிங் பிராட்பேண்ட் சேவை 32 நாடுகளில் … Read more