உலகளவில் சில மணிநேரம் முடங்கிய யூடியூப் சேவை
கலிபோர்னியா: உலகளவில் யூடியூப் தளத்தின் சேவை சில மணிநேரம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை யூடியூப் தளத்தின் பயனர்கள் செவ்வாய்க்கிழமை இரவு எதிர்கொண்டுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். கடந்த 2021-இல் கிடைத்த தகவலின்படி உலகளவில் சுமார் 2.21 பில்லியன் கணக்கிலான மக்கள் இந்த சேவையைப் பெற்று வருகின்றனர். சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்கலாம். இத்தகைய சூழலில் … Read more