குண்டை தடுத்த நிறுத்திய ஹெட்போன் – நம்பமுடிகிறதா!

அதிஷ்டம் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் கதவை தட்டும். அதுபோல தான் அமெரிக்கா இளைஞர் ஒருவர், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக உயிர் பிழைத்துள்ளார். இந்த நல்வாய்ப்பை அவருக்கு உரித்தாக்கியது ஒரு ஹெட்போன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா. இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்ததாக Enough_Dance_956 என்ற பெயருடைய தனது ரெட்டிட் (Reddit) பக்கத்தில் இளைஞர் பதிவிட்டுள்ளார். படுக்கை அறை ஜன்னல் வழியாக வந்த தோட்டாவை ஹெட்போன் தடுத்து எனது உயிரை காப்பாற்றியது … Read more

விற்பனைக்கு வந்த போக்கோ சூப்பர் போன் – விலை மற்றும் அம்சங்கள்!

உலகின் மிகப்பெரிய டெக் MWC 2022 நிகழ்வில், Poco X4 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய பயனர்களுக்காக சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஸ்மார்ட்போனின் விற்பனையை Flipkart ஷாப்பிங் தளத்தில் நிறுவனம் தொடங்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா, Superfast 67W Sonic Charging, 5000 mAh பேட்டரி போன்ற … Read more

ட்விட்டரில் எடிட் பட்டன்: கருத்துக் கணிப்பு நடத்தும் மஸ்க் – பராக் அகர்வால் ரியாக்‌ஷன்

மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தில் வெகு நாட்களாகவே ‘எடிட் பட்டன்’ அம்சம் (Feature) வேண்டுமென்பது அதன் பயனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது ட்விட்டர் தளம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சுமார் 16 ஆண்டுகால எதிர்பார்ப்பு அது. இந்நிலையில், உலகின் முதல்நிலை பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் ‘எடிட் பட்டன்’ வேண்டுமா? வேண்டாமா? என கருத்துக் கணிப்பை (Poll) முன்னெடுத்துள்ளார். இதனை இன்று காலை … Read more

பிற செயலிகளை வலுவிழக்கச் செய்கிறதா சியோமி – காரணம் என்ன?

இந்தியாவில் வலுவாக தடம்பதித்துள்ள சீன நிறுவனமான சியோமி மீது, தனியுரிமை தகவல்கள் பாதுகாப்பு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் புகார்கள் எழுந்தன. இதை எளிதில் கடந்து வந்த நிறுவனம் தற்போது புதிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. அதாவது, சியோமி தனது ஸ்மார்ட்போன்களில் app throttling செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான தரநிலையை பகுப்பாய்வு செய்யும் Geekbench நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் பூலே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சிக்கலில் சியோமி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். … Read more

நம்ம ஊரு டாடாவின் புதிய 'Neu' சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!

இந்தியாவில் டிஜிட்டல் தளங்கள் அபார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சாலையோர வியாபாரம் முதல் ஆடம்பர தொழில்கள் வரை தற்போது டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது UPI பணப் பரிவர்த்தனை முறை என்று சொன்னால் அதற்கு மாற்றிக்கருத்து இருக்க முடியாது. ரூ.1-இல் தொடங்கி லட்சக்கணக்கிலான பணப் பரிவர்த்தனை வரை இந்த சேவை மூலம் பயனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதை உணர்ந்து கொண்ட உள்நாட்டின் மிகப்பெரும் மரியாதைக்குரிய நிறுவனமான ‘ Tata Group ‘ … Read more

ரூ.38,900-க்கு ஐபோன் 12 – ’எக்ஸ்சேஞ்ச் ’ சலுகை விலை அறிவிப்பு

இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை ஐபோன்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஐபோன் 12 உட்பட பல்வேறு போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது ஐ-ஸ்டோர். இது தொடர்பான அறிவிப்பு இந்தியாவுக்கான ஆப்பிள் விநியோகஸ்தர்களின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளிவந்துள்ளது. ஐபோன் 12 ஸ்டோரில் ரூ.38,900-க்கு சலுகை விலையில் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது, வங்கித் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் (பழசுக்கு புதுசு) ஆஃபரில் இந்த விலை தள்ளுபடி கிடைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் … Read more

உனக்கு நான் சளைச்சவன் இல்ல – 2 திட்டங்களை அறிமுகம் செய்த விஐ!

டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, டெலிகாம் நிறுவனங்கள் ஒரு மாதம் முழுமையாக செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை அமல்படுத்தும்படி பணிக்கப்பட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வாரத்தில், முன்னணி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், ஒரு மாதம் செல்லுபடியாகும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வோடபோன் ஐடியா நிறுவனமும், வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, … Read more

ஷாக் கொடுத்த வாட்ஸ்அப் – இதனால தான் உங்க கணக்கு முடக்கப்பட்டிருக்கு!

பயனர் பாதுகாப்பு, செயலி மேம்பாடு என மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் பல புதுப்புது அம்சங்களை அவ்வப்போது பயனர்களுக்கு அளித்து வருகிறது. அதனுடன், நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் பயனர்கள் மீதும் தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அந்தவகையில், Whatsapp இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும், சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் பயனர் கணக்குகளை முடக்கியுள்ளது. ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்ட … Read more

Frevolution எப்படி தொடங்குகிறது என்று பாருங்கள்! ரூ.15,000க்கும் கீழ் பல அம்சங்களுடன் வெளியான Samsung Galaxy F23 5G இந்த புரட்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டது!

சாம்சங் இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்று என்பது நமக்கு புதிய செய்தி அல்ல. பல ஆண்டுகளாக நிறுவனம் புரட்சிகர கேஜெட்களை நமக்களித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மிகப்பெரிய பாய்ச்சலை எடுக்க இவை உந்துசக்தியாக செயல்பட்டது. கடந்த வாரம் விற்பனைக்கு நிறுவனம் கொண்டுவந்த ஸ்மார்ட்போன் Gen-Z தலைமுறையை திரும்பி பார்க்க செய்துள்ளது! விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய Galaxy F23 5G ஸ்மார்ட்போனானது, Galaxy F சீரிஸில் முதன்முதலில் பல அம்சங்களை கொண்டிருக்கும் ஒரு ‘ Frevolution ‘ … Read more

இனி சிம் கார்டு தேவையில்லை – Android 13 கொண்டுவரும் புதிய அம்சம்!

கூகுள் நிறுவனம் தனது அடுத்த Android பதிப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கிடையில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் குறித்த தகவல்களும், வதந்திகளும் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவல் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த வசதியை குறித்தது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பிரீமியம் மொபைல் போன்கள், eSIM வசதியை அளிக்கிறது. வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பம் தான், அனைத்து போன்களிலும் இருக்கும் … Read more