மனுஷன் ஹீரோவா நடிச்சிருக்கலாம்.. டேனியல் பாலாஜி கல்லூரி கால போட்டோ..ஆதங்கப்படும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், அவரின் கல்லூரி கால போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் சிலர் மக்கள்

'ஆடு ஜீவிதம்' முதல் நாள் வசூல் ரூ.16.70 கோடி

பிளஸ்சி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான மலையாளப் படம் 'ஆடு ஜீவிதம்'. பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 1724 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூலாக 16 கோடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை பல சினிமா பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். நடிகர் … Read more

சித்தப்பா டேனியல் பாலாஜி கால்மாட்டிலேயே கண்ணீருடன் நின்ற அதர்வா.. ஆளே இப்படி மாறிட்டாரே

சென்னை: அப்பாவை போலவே சித்தாப்பாவையும் சீக்கிரமே பறிகொடுத்த சோகத்தில் நடிகர் அதர்வா மற்றும் அவரது தம்பி ஆகாஷ் முரளி இருவரும் டேனியல் பாலாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளன. உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தது பெரும்

லண்டனில் தனி பங்களா வாங்கிய பிரபாஸ்?

பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், சமீபத்தில் வெளியான அவரது சலார் திரைப்படம் ஆவேரேஜான வரவேற்பை பெற்றாலும் கூட பிரபாஸுக்கான கிரேஸ் மற்றும் வியாபார மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்ததாக ஸ்பிரிட் உள்ளிட்ட சில … Read more

Actor Daniel balaji: தம்பி.. டேனியல் பாலாஜி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய நடிகை ஆன்ட்ரியா!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். 48 வயதேயான டேனியல் பாலாஜியின் மறைவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சித்தி சீரியல் மூலம் மிகுந்த கவனத்தை பெற்றவர் டேனியல் பாலாஜி. இந்த சீரியல் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இதை சரியாக

'பேமிலி ஸ்டார்' படத்திற்கு 'குஷி' வரவேற்பை நம்பும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் அறியப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. அவருடைய 'அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்' ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்தமான படங்கள். குறிப்பாக 'கீதா கோவிந்தம்' படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்ற ஒரு படமாக அமைந்தது. நேரடியாக தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படம் வெற்றி பெறாமல் போனதால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடித்து கடந்த ஆண்டில் … Read more

Daniel Balaji: மருதநாயகம் படத்திலேயே கமலுடன் இணைந்த டேனியல் பாலாஜி.. கேள்வி கேட்ட தருணம்!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். 48 வயதேயான டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மரணம் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தி என்ற சீரியல் மூலம் நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கிய டேனியல் பாலாஜி, தொடர்ந்து வில்லனாக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும்

பயமாக இருக்கிறது – சீரியல் வில்லி பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் விஜயா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், '33 வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் சிறகடிக்க ஆசை தொடர் எனக்கு பிரபலத்தை கொடுத்துள்ளது. பலர் நான் வெளியே போகும்போதெல்லாம் என்னுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் சீரியலில் ஏன் மீனாவை கொடுமை படுத்துகிறீர்கள். நேரில் பார்த்தால் நான் … Read more

எனக்கு முன்னாடியே போயிட்டியே என் தங்கமே.. டேனியல் பாலாஜி உடலை பார்த்து கதறியழுத அம்மா.. பெருந்துயரம்

சென்னை: ஆவடியில் அம்மாவின் ஆசைக்காகத்தான் டேனியல் பாலாஜி கோயிலையே கட்டினார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது தாய்க்கு துணையாக இருந்து வந்த டேனியல் பாலாஜி தற்போது அம்மாவை விட்டு விட்டு அதற்குள் பிரிந்து சென்றது அவரது தாயை மீள முடியாத துயரில் ஆழ்த்தியுள்ளது. ராதிகா சரத்குமார் நடித்த சித்தி சீரியலில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகராக அறிமுகமான

சின்னத்திரையில் ‛தித்திக்குதே' ஸ்ரீதேவி

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் கடைசி மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழில் காதல் வைரஸ், தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி என்கிற நிகழ்ச்சியில் நடுவராக ஸ்ரீதேவி கலந்து கொண்டுள்ளார். இப்போதும் பார்ப்பதற்கு இளமையாக இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அழகுடன் ஸ்ரீதேவி ஜொலிக்கிறார். எனவே, அவரை மீண்டும் நடிக்க வர … Read more