Thalapathy 69: வெற்றிமாறனுக்கு வாய்ப்பே இல்லையாம்.. விஜய்யோட தளபதி 69 படத்தை இவர் இயக்கப் போறாரா?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் கடைசியாக தளபதி 69 படத்தில் தான் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தான் அந்தப் படத்தை தயாரிக்க போவதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை யார் இயக்கப் போகிறார் என்கிற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

சத்தமின்றி முத்தம் தா: கதை இதுதான்.. பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபனாக பேசிய இயக்குநர்

மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள சத்தம் இன்றி முத்தம் தா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

"ஆண்களுக்கு இன்ட்ரோ சாங், பெண்களுக்கு மட்டும் கவர்ச்சியான பாடலா?" – ரேப் பாடகர் நவீனி (NAVZ-47)

பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சுயாதீன இசைத் துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார், நவீனி. இவரை சுருக்கமாக ‘Navz47’ என அழைப்பார்கள். ‘நீயே ஒளி’ பாடல் மூலமாகப் பலருக்கு இவருடைய குரல் ஊக்கமளித்திருக்கிறது. தன்னைச் சுற்றி நிகழும் சம்பங்கள் குறித்து பேச்சு வடிவிலேயே ராப் பாடல்கள் அமைத்து வருபவர் இப்போது ‘கோக் ஸ்டுடியோ’ தமிழ் இரண்டாவது சீசனில் ‘ஏலே மக்கா’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘Navz-47’ எனப் புனைபெயர் வைப்பதற்குக் காரணம் என்ன? “என்னுடைய பெயர் … Read more

மாடர்ன் கெட்டப்புக்கு மாறிய ரட்சிதா மகாலட்சுமி

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. அதன் பிறகு பல தொடர்களில் நடித்தவர், பிக்பாஸ் சீசன் -6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் சினிமாவில் உப்பு கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ரட்சிதா, தற்போது, பயர், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் எக்ஸ்ட்ரீம் என்ற படத்தில் கதையின் நாயகியாக ஆக்ஷன் ரோலில் நடிக்கிறார். கிளாமர் கலந்த மாடர்ன் கெட்டப்புகளில் நடிப்பதற்கும் அவர் தயாராகி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் … Read more

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்.. திருமாவளவனின் பங்கு அதிகம்.. மாரி செல்வராஜ் ஷேரிங்ஸ்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மாமன்னன் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எழுச்சித் தமிழர் விருது வழங்கப்பட்டது. அதனையடுத்து விழாவில் பேசிய மாரி செல்வராஜ் திருமாவளவன் பற்றி ஏகப்பட்ட விஷயங்களை பேசினார். அது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

`48 வருஷம் கழிச்சு என் கனவு நிறைவேறியிருக்கு!' – 16 வயதினிலே பட டாக்டர் சத்தியஜித்

கன்னடத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் புல்லட். நடிகர் தர்ம கீர்த்திராஜ் நடிப்பில் எமோஷனல் மற்றும் த்ரில்லர் சப்ஜெக்டாக வந்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சத்தியஜித். சில தினங்களுக்கு முன், இந்தப் படத்தின் போஸ்டர்கள் பெங்களூரு வீதிகளில் தென்பட, அதில் எங்கேயோ பார்த்த ஒரு முகம். உற்றுப் பார்த்தால், அட.. நம்முடைய `16 வயதினிலே’ வெர்ட்னரி டாக்டர். ‘புல்லட்’ படத்தை இயக்கியிருப்பதுடன் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கும் சத்தியஜித், நம்ம ‘மைல்ல்ல்’ டாக்டரேதான். பெங்களூருவில் வசித்து வரும் சத்தியஜித்தை மொபைலில் பிடித்தோம். ”சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல டி.எஃப்.டி படிச்சது 1976. … Read more

மே மாதத்தில் வெளியாகும் ஜெயம் ரவி படம்

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன் ஆகிய படங்கள் ஏமாற்றத்தை தந்தாலும் சைரன் படம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. தற்போது ஜெயம் ரவியின் 33வது படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தை அமைச்சர் உதயநிதியின் மனைவி மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் … Read more

சூரி காட்டில் சூறைக்காத்துதான்.. கொட்டுக்காளி படத்துக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் பற்றி புதிய தகவல்

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பில் உள்ளது. இந்தப் படத்துடன் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பையும் ஷங்கர் நடத்தியதால் இரண்டு படங்களின் வேலைகளும் தாமதமாகி ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. இந்த வருடமாவது இந்தப் படம் வெளியாகுமா என்று ராம் சரண் ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வருட கிறிஸ்துமஸ் … Read more

Actor Adade Manohar: நாடக -சீரியல் நடிகர் அடடே மனோகர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: பழம்பெரும் நாடக, டிவி நடிகர் அடடே மனோகர் வயது மூப்பு காரணமாக காலமானார். சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடிகராக மட்டுமில்லாமல் கதாசிரியராகவும் இவர் செயல்பட்டுள்ளார். சென்னை குமரன் சாவடியில் வசித்துவந்த அடடே மனோகர் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றிக் கொண்டே, நாடகங்கள், டிவி சீரியல்களில்