FDFS: `ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம்' – தயாரிப்பாளரின் அதிரடி திட்டம்!

சின்ன பட்ஜெட் படங்களுக்கும் தியேட்டருக்கு மக்களை கூட்டம் கூட்டமாக வரவழைக்க வேண்டும் என்ற நோக்கில், தயாரிப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் பேசப்பட்ட ‘ஈரமான ரோஜாவே’, ‘மாயா பஜார்’, ‘அலெக்சாண்டர்’ (விஜயகாந்த்) படங்களைத் தயாரித்தவர் கேயார். ‘மைடியர் குட்டிச்சாத்தான்’, ‘ஸ்பை கிட்ஸ்’ கமலின் ‘பேசும் படம்’ போன்ற படங்களையும் விநியோகித்திருக்கிறார். அவர் இப்போது தனது ‘ஜி.ஆர்.எம் ஸ்டுடியோ’ மூலம் ரவி முரு இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் நடித்திருக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற … Read more

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ட்ரெயின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்

இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி உள்ளார். ஆனால் அப்படம் இதுவரை வெளியாகவில்லை. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோல் நடித்திருந்தார். அதன் பிறகு தனது தம்பி ஆதித்யா இயக்கிய டெவில் என்ற படத்திற்கு இசையமைத்த மிஷ்கின், மாவீரன், லியோ உள்ளிட்ட சில படங்களிலும் வில்லன் வேடங்களில் நடித்தார். இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் என்ற படத்தை அவர் இயக்க இருப்பதாக செய்திகள் … Read more

19 வயசுல எக்கச்சக்கமா சம்பாதிக்கிறேன்.. எல்லாத்துக்கும் Josh App தான் காரணம்.. செளந்தர்யா பேட்டி

சென்னை: தன்னுடைய வாழ்க்கையையே ஜோஷ் ஆப் கடந்த 2 ஆண்டுகளில் மாற்றியிருப்பதாக இளம் கன்டென்ட் கிரியேட்டரான செளந்தர்யா அளித்திருக்கும் பேட்டி பலருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் விதமாக உள்ளது. “இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம்

அசர வைக்கும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

Actor Karthi Net Worth: தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக விளங்கும் கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அன்னபூரணி விமர்சனம்: நயன்தாராவின் நடிப்பு; கச்சிதமான ஒன்லைன்; ஆனால், கைகூடியதா கனவு?

மாமிசத்தின் பக்கத்தில் நிற்பதுகூட பாவம் என்கிற குடும்பத்தில் பிறந்த அன்னபூரணிக்கு உலகில் தலைசிறந்த செஃப் ஆக வேண்டும் என்கிற ஆசை. அதற்கான தேடலில் அவர் சந்திக்கும் சவாலே படத்தின் ஒன்-லைன். ஸ்ரீரங்கத்து ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னபூரணி (நயன்தாரா). அவரின் தந்தை ரங்கராஜன் (அச்யுத் குமார்) பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் அதிக சம்பளம் தரும் ரயில்வே வேலையை விட்டுவிட்டு ரங்கநாதருக்குச் சேவை செய்வதற்காகக் கோயிலில் பிரசாதம் சமைப்பவராகப் பணிசெய்பவர். சிறுவயதிலிருந்தே சமையலில் பேரார்வம் கொள்ளும் அன்னபூரணிக்கு ‘கார்ப்பரேட் … Read more

ஐஎம்டிபி தரவரிசை பட்டியல் : முதலிடத்தில் ‛ஜவான்', லியோவுக்கு 4, ஜெயிலருக்கு 6வது இடம்

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் பற்றிய தகவல்களுக்கான உலகின் மிகவும் பிரபலமான இணையதளம் ஐஎம்டிபி. தியேட்டர்களில், ஓடிடி தளங்கில் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்து அதனை படத்திற்கான ஆதரவாக கொண்டு தரவரிசை பட்டியலை இந்த அமைப்பு வெளியிடும். அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரையிலான படங்களின் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி தியேட்டர்களில் வெளியான படத்தில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கி ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படம் முதலிடத்தை … Read more

Annapoorani Review: சோறு முக்கியம் தான்.. ஆனால், சுவையாவும் இருக்கணும்ல.. அன்னபூரணி விமர்சனம்!

நடிகர்கள்: நயன்தாரா, ஜெய், சத்யராஜ்இசை: தமன்இயக்கம்: நிலேஷ் கிருஷ்ணா சென்னை: இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக இன்று ரிலீஸ் ஆகி உள்ள படம் தான் அன்னபூரணி. சமையல் கடவுள் என சப்டைட்டில் எல்லாம் போட்டு படத்திற்கு பெரும் பில்டப் கொடுத்தாலும், சுவையான உணவாக இல்லை என்பது தான் பெரிய

Parking Review: இரு கார்கள்; இரண்டு ஆண்கள்; ஒரு பார்க்கிங்! – படம் எப்படி?

பார்க்கிங்கில் யார் வண்டியை நிறுத்துவது என்கிற சிறிய ஈகோ `தீ’, இரு நபர்களிடையேயான பெரு நெருப்பாகி பின்னர் எப்படிக் காட்டுத்தீயாக மாறுகிறது என்பதே ‘பார்க்கிங்’ படத்தின் ஒன்-லைன்! தங்கள் முதல் குழந்தை கருவுற்றிருக்கும் வேளையில், புதுமண தம்பதிகள் ஈஸ்வர் (ஹரீஷ் கல்யாண்) மற்றும் அதிகா (இந்துஜா ரவிச்சந்திரன்) ஒரு வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்குக் குடிபெயர்கிறார்கள். அதே வீட்டில் அரசு அதிகாரியான இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்), அவரின் மனைவி செல்வி (ரமா ராஜேந்திரன்) மற்றும் மகள் அபர்ணா (பிராத்தனா நாதன்) … Read more

சென்னை சர்வதேச திரைப்பட விழா 14ம் தேதி தொடங்குகிறது : 12 தமிழ் படங்கள் விருதுக்காக மோதல்

இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை சென்னையில் நடத்தி வருகிறது. அந்த வரிசையில் 21வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் பல விருதுகளை வென்ற வெளிநாட்டு படங்களான தி டீச்சர்ஸ் லவுஞ்ச், பேர்ப்பக்ட் டேஸ், டூ நாட் எஸ்பெக்ட் டூ மச் பிரம் … Read more