சினிமா ஆகும் திருக்குறள்
காமராஜரின் வாழ்க்கையை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து, இயக்கியவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். தற்போது அவர் திருக்குறளை சினிமாவாக தயாரித்து, இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறோம். அச்சு ஊடகம் என்பது எழுத்தறிந்தோர்க்கு மட்டுமே. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும். இசையைப் போல ஓவியத்தைப் போல திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம். திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் … Read more