Kanguva: வித்தியாசமான காட்சியமைப்பு; பரபர சண்டைக் காட்சி; 20 நாட்கள் ஷூட்டிங்!
மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி வருகிறது சூர்யாவின் ‘கங்குவா’. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி, தீவிராக நடந்து கொண்டிருக்கிறது. கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய இடங்களைத் தொடர்ந்து இன்று வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. ‘கங்குவா’ டீம் ‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் பல்வேறு வேடங்களில் சூர்யா நடித்து வரும் படம் ‘கங்குவா’. இதில் சூர்யாவின் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். அவர்களுடன் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஜெகபதிபாபு, நட்டி நட்ராஜ், ‘கே.ஜி.எஃப்’ அவினாஷ், கே.எஸ்.ரவிகுமார், கோவை … Read more