LGM Review: காதலுக்காக மாமியாருடன் ரோடு ட்ரிப்; தோனியின் முதல் தமிழ்த் தயாரிப்பு எப்படியிருக்கிறது?

ஐடி ஊழியர்களான கௌதமும் (ஹரீஷ் கல்யாண்) மீராவும் (இவானா) இரண்டு வருட டேட்டிங்கிற்குப் பிறகு தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அடுத்த கட்டமாக இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நோக்கி நகர்கிறது காதல். தன் கணவருடன் தனி வீட்டில் திருமண வாழ்க்கையை நடத்த ஆசைப்படுகிறார் மீரா. ஆனால், சிங்கிள் பேரன்ட்டான தன் அம்மா லீலாவை (நதியா) விட்டு வர மறுக்கிறார் கௌதம். அதனால் ‘நாம் குடும்பத்துடன் சுற்றுலா செல்வோம். அங்கு உன் அம்மாவுடன் பழகிப்பார்த்து செட்டானால்தான் கல்யாணம்’ என கன்டிஷன் … Read more

அடுத்தடுத்து வெளியாகும் அண்ணன் தம்பியின் போலீஸ் படங்கள்

மலையாள திரை உலகில் கடந்த 40 வருடங்களாக குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் சீனிவாசன். இவருக்கு கதாசிரியர், இயக்குனர் என இன்னும் சில முகங்களும் உண்டு. இவரது மகன்களான வினீத் சீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் இருவருமே இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் வெற்றிகரமாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருகின்றனர். வினீத் சீனிவாசனை தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த அளவிற்கு அவரது தம்பி தயன் சீனிவாசனை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் நயன்தாரா, நிவின்பாலி நடித்த லவ் ஆக்சன் டிராமா … Read more

Saregamapa little champs: ஒருவர் சம்பாத்தியத்தில் 15 பேர் வாழ்க்கை, சரிகமப பிரவீன் குடும்ப சோகம்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒsளிபரப்பாகி வருகிறது சகரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், அபிராமி மற்றும் சைந்தவி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் போட்டியாளர் பிரவீன் குடும்பத்தில் சோகம்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது சரிகமப லிட்டில் … Read more

Jailer Audio Launch: “ 'I miss you nelson'னு தலைவர் சொன்னாரு!"- வி.டி.வி கணேஷ்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன்,சுனில் ஆகியோரின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.’ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்தின் சகோதரர் பங்கேற்றுள்ளனர்.மேலும், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், ரெடின் கிங்ஸ்லி, அனிருத், விக்னேஷ் … Read more

11 ஆண்டுளுக்குப் பிறகு மலையாளத்திற்கு திரும்பிய ராகினி திவேதி

கன்னடத்தில் கடந்த 2009ல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராகினி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் என்கிற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2020ல் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு ஆளாகி சிறைச்சாலைக்கும் சென்று வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக இவரது நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஷீலா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. சில உண்மைகளை தேடி கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பயணிக்கும் … Read more

Sarathkumar: சரத்குமாரின் முதல் மனைவி இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா..? எல்லாம் அந்த அனுபவம்!

சென்னை: புலன் விசாரணை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்குமார். கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த அவர், தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சரத்குமார் தனது முதல் மனைவியை பிரிந்து தற்போது ராதிகா உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சரத்குமாரின் முதல் மனைவி இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. சரத்குமாரின் முதல் மனைவி இப்போது…: 1990ம் ஆண்டு வெளியான புலன் விசாரணை படத்தில் விஜயகாந்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரத்குமார். பத்திரிகையாளராக வேலைப் பார்த்து … Read more

Jailer Audio Launch: "ரஜினி சார்கூட இருந்தா எங்க அப்பாகூட இருந்த மாதிரி இருக்கு" – விக்னேஷ் சிவன்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், அனிருத், விக்னேஷ் சிவன், அருண்ராஜா, VTV கணேஷ், சூப்பர் சுப்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தில் விக்னேஷ் சிவன் ‘ரத்தமாரே’ எனும் பாடலையும், அருண்ராஜா ‘காவாலா’ பாடலையும், சூப்பர் சுப்பு, ‘ஹுக்கும்’, … Read more

பிறமொழி நடிகர்களை புறக்கணிக்கவில்லை : பவன் கல்யாணுக்கு நாசர் பதில்

முன்னணி தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். தனது நடிப்பில் உருவாகி உள்ள 'புரோ' படத்தின் புரமோசன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தை சமுத்திரகனி இயக்கி உள்ளார். பிரமோசன் நிகழ்வொன்றில் பேசிய பவன் கல்யாண் “தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என புதிய விதி கொண்டு வந்துள்ளனர். குறுகிய மனநிலையுடன் இல்லாமல் பெரிதாக யோசித்தால் தமிழ் சினிமா 'ஆர்ஆர்ஆர்' போன்ற சர்வதேச படத்தை கொடுக்க முடியும். இன்று தெலுங்கு திரையுலகம் … Read more

Jailer: வெளியானது ஜெயிலர் பாடல்கள்… BGM-இல் அலறவிட்ட ராக்ஸ்டார் அனிருத்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதனிடையே ஜெயிலர் படத்தில் இருந்து மூன்று பாடல்களை படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் மற்ற பாடல்களும் தற்போது நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் வெளியானது. அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெயிலர் ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. வெளியானது ஜெயிலர் பாடல்கள் : அண்ணாத்தைக்குப் பின்னர் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் … Read more

Captain Miller Teaser: ப்ரேமுக்கு ப்ரேம் மிரட்டல்.. கொல மாஸ்: கேப்டன் மில்லராக மிரள விடும் தனுஷ்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆரம்ப காலத்தில் தனது தோற்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தனுஷ், இன்று நடிப்பு அசுரனாக ஹாலிவுட் சினிமா வரை சென்று தடம் பதித்துள்ளார். கதையின் நாயகனாக மாறி தனுஷ் உயிர் கொடுத்த கதாபாத்திரங்கள் ஏராளம். அந்த வகையில் தற்போது கேப்டன் மில்லரில் மிரட்டலான நடிப்பை வழங்கி அதிர வைத்துள்ளார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் … Read more