விஜய் ஆண்டனியின் கொலை..வெளியான சில மணி நேரத்தில் இணையத்தில் லீக்கானதா?

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் லீக்கானதாக போலியான ஒரு லிங்க் இணையத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா என நடித்துள்ள திரைப்படம் கொலை. இப்படத்திற்கு கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் … Read more

Aneethi Review: அர்ஜுன் தாஸின் 'அநீதி' படம் எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கவனம் ஈர்த்து வருகிறார் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்தவர் அதனை தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் படங்களில் நடித்தார். இவரின் குரலுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது முழு நேர ஹீரோவாக மாறியுள்ள அர்ஜுன் தாஸ் நடிப்பில் தற்போது ‘அநீதி’ என்ற படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ‘அங்காடித் தெரு’ படம் மூலம் கவனம் ஈர்த்த தரமான இயக்குனரான வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது ‘அநீதி’ … Read more

கிருபாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பட்டியல் என்னிடம் இருக்கிறது : விக்ரமன்

பிக்பாஸ் விக்ரமன் தன்னை காதலித்து பண மோசடி செய்ததாக கிருபா முனுசாமி கூறியதையடுத்து விக்ரமனும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார். இருப்பினும் பலர் விக்ரமனுக்கு எதிராக விமர்சனங்களை வைத்து வந்த நிலையில், தற்போது தனது பக்க விளக்கத்தை விரிவாக பேட்டியாக அளித்துள்ளார். அந்த பேட்டியில், 'கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். அந்த சமயம் நட்பு ரீதியில் நான் அவரிடம் பணம் வாங்கியிருந்தேன். அப்படி வாங்கிய பணத்தையும் என்னிடம் பணம் இருக்கும் போதெல்லாம் … Read more

கேரள மாநில திரைப்பட விருது..மம்முட்டி சிறந்த நடிகர்.. நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படம்!

திருவனந்தபுரம்: நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருதை கேரள அரசு வழங்கி உள்ளது. நடிகர் மம்மூட்டி நடிப்பில் மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியானத் திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழியில் வெளியான இத்திரைப்படமான நடிகை ரம்யா பாண்டியன், பூ ராமு ஆகியோர் நடித்திருந்தனர். நண்பகல் நேரத்து மயக்கம்: கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு … Read more

Jailer Audio Launch: தலைவரோட மாஸ் ஸ்பீச் ரெடி: சரவெடியாய் வெளியான அறிவிப்பு.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் ஒவ்வொரு படங்களின் ரிலீசையும் திருவிழா போல் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அதே போல் ரஜினி படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் அவர் பேசும் பேச்சை கேட்பதில் ரசிகர்களுக்கு அலாதி இன்பம். அந்த வகையில் தற்போது ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்திற்கான ஆடியோ லான்ச் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ரஜினி நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியாகியிருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் … Read more

Kaavaalaa: `என் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம் இது'- தமன்னாவின் நெகிழ்ச்சிப் பதிவு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஜெயிலர் இப்படத்தில் மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தில் இருந்து `காவாலா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்பாடல் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட் அடித்திருக்கிறது. இதில் தமன்னாவின் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமன்னா, | ‘காவாலா’ பாடல் ரசிகர்கள் தமன்னாவின் நடனத்தை வேறு … Read more

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது கொலை மிரட்டல் புகார்

சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பாடகர் கிருஷ்ணா புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்ற போது அங்கு ஈஸ்வர் சக நடிகர்களுடன் இருந்தார். என்னை பார்த்ததும் என்னிடம் வந்து உடனடியாக அங்கிருந்து கிளம்புமாறு மிரட்டியதுடன், என்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளதாக கூறினார். எனக்கும் அவருக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவருடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படியிருக்க உயிர் பயத்தை காட்டும் … Read more

ஷாருக்கானுக்கே ஜோடியாகிட்டேன்.. இனிமே பழைய சம்பளம் பத்தாது.. அதிரடியாக வேல்யூவை கூட்டிய நயன்தாரா?

சென்னை: நடிகை நயன்தாரா தனது 75வது படத்தில் நடித்து வரும் நிலையில், அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல் ஒன்று பரவி வருகிறது. ரஜினிகாந்த் உடன் தர்பார், அண்ணாத்த படங்களில் நடித்த நயன்தாரா, மலையாளத்தில் பிரித்விராஜின் கோல்டு படத்திலும் நடித்தார். மேலும், உமன்சென்ட்ரிக் படங்களான நெற்றிக்கண், ஓ2, கனெக்ட் என கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் … Read more

Jailer: பட்டையை கிளப்பிய 'காவாலா'.. வேறலெவல் வரவேற்பு: நெகிழ்ந்து போன தமன்னா..!

‘காவாலா’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகை தமன்னா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எகிறும் எதிர்பார்ப்புரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘ஜெயிலர்’ படம் உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இதன் படப்படிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இதனையடுத்து படத்தின் அப்டேட்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் இதன் இரண்டாம் சிங்கிள் அண்மையில் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.நெல்சன் உறுதி’அண்ணாத்த’ படத்திற்கு பிறகு … Read more

கைமாறிய ஹிரண்ய கசிபு படம் : ராணா மீது கோபத்தில் குணசேகர்

தெலுங்கில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கடு, சைனிக்கூடு என மகேஷ்பாபுவை வைத்து கமர்ஷியல் படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் குணசேகர். சமீபகாலமாக அவரது கவனம் புராண மற்றும் வரலாற்று படங்கள் பக்கம் திரும்பியது. கடந்த 2015ல் அனுஷ்கா கதாநாயகியாக நடித்த ருத்ரமாதேவி என்கிற படத்தை இயக்கினார். பாகுபலி வில்லனான ராணாவை இந்த படத்தில் கதாநாயகனாக மாற்றினார். அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது இயக்கத்தில் புராண கதையான சாகுந்தலம் என்கிற படம் … Read more