Hiphop Tamizha: இந்தியாவிலே முதன்முறை: ஹிப் ஹாப் ஆதி செய்துள்ள அசத்தல் காரியம்.!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர் சுந்தர் சி இயக்கி தயாரித்த ‘ஆம்பள’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்திற்கு இசையமைத்தார். இந்தப்படத்தின் ஆல்பம் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தது. அதனை தொடர்ந்து தனி ஒருவன், அரண்மனை 2, கத்தி சண்டை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் … Read more

தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர்

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப்படம் பிரமாண்டமாய் உருவாகிறது. இதையடுத்து தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதுதவிர மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் அவர் நடிக்க வேண்டி உள்ளது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகின. இந்நிலையில் … Read more

Atlee: தயாரிப்பாளரை கால்பந்து மாதிரி எட்டி உதைத்த அட்லீ..கிழித்தெடுத்த கே.ராஜன்..வாய்விட்டு சிரித்த ஹீரோ..!

தமிழ் சினிமாவையும் தாண்டி அட்லீ தற்போது பாலிவுட் வரை சென்று பிரபலமான இயக்குனராக வலம் வருகின்றார். என்னதான் இவர் ஒரு இயக்குனராக முன்னேறி வந்தாலும் இவரின் மீது கடுமையான விமர்சனங்களும் ஒரு பக்கம் வந்துகொண்டே தான் இருக்கின்றது. இவரின் படங்கள் காப்பி என்றும், தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவை இழுத்து விடுவார் என்றும் அட்லீயின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாது அட்லீ தன் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார். தற்போது ஷாருக்கானின் ஜவான் … Read more

‘தலைவி’ பட வெளியீட்டில் நஷ்டம்-ரூ.6 கோடி கேட்டு நீதிமன்றத்தை நாடும் விநியோகஸ்தர் நிறுவனம்?

‘தலைவி’ படத்தை வெளியிடுவதற்காக முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை, தயாரிப்பு தரப்பிடமிருந்து பெற்றுத் தரக்கோரி, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தலைவி’. இந்தப் படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்தத் திரைப்படத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மறைந்த … Read more

தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு

கடந்த 2021ல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தலைவி என்கிற படம் வெளியானது. இயக்குனர் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்திருந்தார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படம் உருவாகி வந்த சமயத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த படத்தை இந்திய … Read more

Kovai Guna: கோவை குணா மறைவுக்கு காரணம் இதுதான்: மதன் பாப் கூறிய அதிர வைக்கும் தகவல்.!

சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் கலைஞர்களும் பிரபலமாவது வழக்கம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மிமிக்ரி கலைஞரான கோவை குணா. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், ஜனகராஜ், கவுண்மணி உள்ளிட்ட பிரபல நடிகர்களை போல் மிமிக்ரி செய்யக்கூடியவர். குறிப்பாக நடிகவேள் எஸ்.ஆர். ராதாவை போன்று அச்சு அசலாக பேசக்கூடியவர் குணா. சன் டிவியில் ஒளிப்பரப்பான … Read more

சிம்புவுடன் மோதும் விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் …

மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம்

மலையாளத்தில் மம்முட்டி தற்போது நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று 'காதல் தி கோர்'. இந்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஜோதிகா. அதுமட்டுமல்ல, மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை.. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை … Read more

STR 48: போடு வெடிய.. சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை: 'எஸ் டி ஆர் 48' படத்தின் தாறுமாறு அப்டேட்.!

சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் பிரம்மாண்டமாக உருவாகயிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களை நிதானமாக தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் கமல் தயாரிப்பில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 48 படத்திற்காக எக்கசக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘மாநாடு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கடந்தாண்டு சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் … Read more

லவ் ஜிகாத் செய்யப்பட்டாரா மணிமேகலை? ’உருப்புடற வழிய பாருங்க’ டிவிட்டரில் கொடுத்த தரமான பதிலடி

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் மணி மேகலை குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். இவரின் சுட்டித் தனமும், குழந்தை சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட, இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமல்லாமல் தனக்கென ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் மணிமேகலை தன்னுடைய கணவர் ஹூசேன் உடன் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.  pic.twitter.com/QpEg21SdUP — பாஜக தகவல் தொழில் நுட்ப … Read more