பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் வெப் சீரிஸ்: ஏப்ரல் 28ல் வெளியாகிறது

பிரியங்கா சோப்ரா நடித்து வரும் பிரமாண்ட ஹாலிவுட் வெப் சீரீஸ் 'சிட்டாடல்'. அதிரடி ஆக்ஷன் தொடரான இது வருகிற ஏப்ரல் 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. முதல் நாள் இரண்டு எபிசோட்களும், அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தலா ஒரு எபிசோடும் வெளியாகிறது. இதில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டுக்கொண்டிருந்த … Read more

விஜய் ஆண்டனியின் ‛பிச்சைக்காரன்-2' ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ்!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பிச்சைக்காரன். இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன்-2 படத்தை தானே இயக்கி, இசையமைத்து, எடிட்டிங் செய்து நாயகனாகவும் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் அவருடன் காவியா தபார், யோகி பாபு, ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த பிச்சைக்காரன்-2 படத்தின் நான்கு நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது, இப்படம் மூளை மாற்று அறுவை சிகிச்சையால் … Read more

இளையராஜாவை சந்தித்த நாக சைதன்யா நெகிழ்ச்சி

நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க பிரியாமணி வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரத்குமார், சம்பத் ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தற்போது … Read more

சங்கமித்ராவில் பூஜா ஹெக்டே….?

சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன் சங்கமித்ரா பட அறிவிப்பை வெளியிட்டனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தபட போஸ்டரை வெளியிட்டு அமர்க்களம் செய்தனர். சரித்திர கதையில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார் சுந்தர் சி. ஆனால் பொருளாதார பிரச்னையால் இந்த படம் அப்போது டிராப் ஆனது. இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் படத்தில் சில … Read more

என் படத்தை திருடி விட்டார்கள்: மம்மூட்டி படம் மீது பெண் இயக்குனர் புகார்

சென்னை: சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பெண் இயக்குனர் ஹலீதா ஷமீம். அவரது ஏலே படத்தை திருடி, மம்மூட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள படம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து …

ஜெயம் ரவியின் அகிலன் பட சிங்கிள் பாடல் வெளியானது

பூலோகம் படத்தை அடுத்து மீண்டும் கல்யாண் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். துறைமுகம் பின்னணியில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகிலன் படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொறக்கும் போதும் … Read more

சங்கமித்ரா மீண்டும் தொடங்குகிறது ஸ்ருதிக்கு பதில் பூஜா ஹெக்டே

சென்னை: கைவிடப்பட இருந்த சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த படம் சங்கமித்ரா. தேனாண்டாள் …

சோஷியல் மீடியா சர்ச்சையில் மாரிமுத்து : தந்தைக்காக மகன் விளக்கம்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரில் பிற்போக்குத்தனம், ஆணாதிக்கம் கொண்ட ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து ஆபாச புகைப்படங்களை பதிவிடும் ஒரு ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணின் புகைப்படத்தின் கீழ் தனது மொபைல் எண்ணை பதிவிட்டு கால் செய்ய சொன்னது போல ஸ்கிரீன்சாட்டுகள் வைரலானது. இதனை வைத்துக்கொண்டு சிலர், அவரை வசைபாட ஆரம்பித்தனர். அதன்பிறகு சில மணிநேரங்களிலேயே அந்த அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டது. இதனால் திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் … Read more

சினிமாவில் வாரிசு விவகாரம் ராம்சரணை வம்புக்கு இழுத்த நானி

ஐதராபாத்: சினிமாவில் வாரிசு விவகாரம் தொடர்பாக ராம்சரணை நானி இழுத்ததால் அவரது ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். நானி, ராணா ஆகியோர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து தொகுப்பாளர் …

ஆண், பெண் சமம் அல்ல – நடிகர் சதீஷ்

பிரகாஷ் இயக்கத்தில் விஜய் சிவன், சாந்தினி நடித்துள்ள படம் ‛குடிமகான்'. பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்துள்ளார். இப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் சதீஷ், ‛‛பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் … Read more