இசைஞானி இளையராஜாவை கடுமையாக விமர்சித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!!

டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், பசங்க, நாணயம், யாதுமாகி, ஈசன், ஓ அந்த நாட்கள் , சண்ட மருதம் என்று தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்று மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பேட்டியில், ’’இளையராஜா மாதிரி ஒரு மட்டமான மனிதரை பார்க்க முடியாது . அவர் பெரிய இசையமைப்பாளர் ஞானி … Read more

'வாழ்வில் மறக்க முடியாத தருணம்' : முதுமலை ஆஸ்கார் தம்பதி நெகிழ்ச்சி

நீலகிரி : நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில், குட்டியானைகள் அதன் பாகன்கள் இடையேயான பாசப்பிணைப்பை மையமாக வைத்து, ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கனசால்வஸ் என்பவர், எடுத்த ஆவண படத்துக்கு, சிறந்த ஆவண படத்திற்கான 'ஆஸ்கார்' விருது கிடைத்தது. இதில், இடம் பெற்றிருந்த, முதுமலை யானை பாகன் பொம்மன் அவர் மனைவி பெல்லியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'ஆஸ்கார்' விருது பெற்ற பின், மும்பை வந்த இயக்குனர் கார்த்திகி, முதுமலை யானை பாகன் தம்பதிகள் பொம்மன் – … Read more

ரசிகர் உருவாக்கிய கேப்டன் மில்லர் போஸ்டரை பகிர்ந்த தனுஷ்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உருவாக்கிய கேப்டன் … Read more

செப்., 1ல் ‛குஷி' படம் ரிலீஸ்

சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்தப்படம் வரும் ஏப்., 14ல் ரிலீஸாகிறது. இதையடுத்து குஷி என்ற படத்தில் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இதை ஷிவா நிர்வனா இயக்குகிறார். காதல் கதையில் தயாராகிறது. இந்த படம் ஆரம்பித்த சமயத்தில் தான் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா. இதற்காக சில மாதங்களாக அவர் சிகிச்சை மேற்கொண்டதால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா … Read more

கக்கன் வாழ்க்கை திரைப்படமாகிறது

சென்னை: மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் அமைச்சரவையில், மறைந்த கக்கன் அமைச்சராகப் பணியாற்றினார். அரசியல் வாழ்வில் தூய்மை, அமைச்சர் பதவியில் நேர்மை, மக்களுக்கு சேவை செய்வதே கடமை என்று வாழ்ந்து மறைந்த அவரைப் …

'கேடி-தி டெவில்' : சத்யவதியாக இணைந்த ஷில்பா ஷெட்டி

பாலிவுட்டின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் குஷி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடித்துள்ள இவர் அடுத்து கன்னடத்தில் உருவாகும் பான் இந்தியா படமான 'கேடி-தி டெவில்'-ல் இணைந்துள்ளார். இதில் அவர் சத்யவதி எனும் வேடத்தில் நடிக்கிறார். நடிகர் துருவா சர்ஜா நாயகனாக நடிக்கும் இந்தபடம் 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி … Read more

ஜூனியர் என்டிஆருக்கு வில்லனாகும் சைப் அலிகான்

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். இதனால், இவர் அடுத்து நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இவர் நடிக்கும் …

உருப்படுகிற வழியை பார்க்கலாம் – மணிமேகலை பதிலடி

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. விஜய் டிவியில் அவர் 'மிஸ்டர் அணட் மிஸ்ஸஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தொடர்ந்து கோமாளியாக கலக்கி வந்தார். நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் திருமணம் செய்துக்கொண்ட அவர்கள் தற்போது வரை தனியாக வாழ்ந்து வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் தனது … Read more

நான் 2வது ஹீரோயினா?: மாளவிகா மோகனன் கோபம்

சென்னை: பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்’ தெலுங்கு படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார் என தகவல் பரவியது. அதேபோல், மற்றொரு தெலுங்கு படத்தில் 2வது ஹீரோயினாக மாளவிகா நடித்து வருவதாகவும் இதன் படப்பிடிப்பில் …

பிச்சைக்காரன் 2 படம் தள்ளி போகிறதா?

2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைகாரன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து அவரே இயக்கியும் உள்ளார். படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி அன்று வெளியாகும் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படமும் … Read more