யாருக்காகவும் மாற வேண்டியதில்லை – ராஷ்மிகா

தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது புஷ்பா 2 மற்றும் அனிமல் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அழகு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: ‛‛அழகுக்கு என்று யாரையும் உதாரணமாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான அழகு இருக்கும். கண்ணாடி முன்பு நான் நிற்கும்போது ஆரோக்கியமாகவும், உடல் பிட்டாகவும் இருக்கிறேனா என்று தான் பார்ப்பேன். சிலர் சற்று குண்டாக இருந்தால் அழகாக இருப்பார்கள். யாருக்காகவும் நம்மை … Read more

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்

ஜம்மு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ‘லியோ’. சஞ்சய் தத், திரிஷா, கவுதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு …

ஆசிய திரைப்பட விழா : ஹாங்காங் பறந்த பொன்னியின் செல்வன் படக்குழு

அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் அதே பெயரில் படமாகி, கடந்தாண்டு முதல்பாகம் வெளியாகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது. மணிரத்னம் இயக்கி இருந்தார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இதன் இரண்டாம் பாகம் ஏப்., 28ல் வெளியாக உள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து … Read more

சிங்கள மொழி படத்தில் தர்ஷனா

சென்னை: மதுமிதா இயக்கிய ‘மூணே மூணு வார்த்தை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், தர்ஷனா ராஜேந்திரன். அடுத்து ‘கவண்’, ‘இரும்புத்திரை’ உட்பட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய …

லியோ படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத் : வைரலான வீடியோ மற்றும் விஜய்யின் லுக்

மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் ஹிந்தி நடிகர் சஞ்சய் … Read more

சினிமா டப்பிங் யூனியனுக்கு சீல்

தென்னிந்திய டப்பிங் யூனியனின் தலைவராக நடிகர் ராதாரவி இருக்கிறார். பொதுச்செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். இந்த யூனியன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள 80 அடி சாலையில் உள்ளது. இது அமைந்துள்ள கட்டடம் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகும் ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையாம். அதனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று தென்னிந்திய டப்பிங் யூனியன் வளாகத்திற்கு சீல் வைத்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் … Read more

முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்து ரசித்த ரஜினி!

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி அவர் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் வகையில் சென்னை பாரிமுனையில் அமைச்சர் சேகர்பாபு, மு.க. ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு , நடிகர் யோகி பாபு உள்பட பலர் உடன் … Read more

எப்போதும் என் அருகில் இருப்பதற்கு நன்றி : சாயிஷா

கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்தபோது ஆர்யா, சாயிஷா இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு 2019ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது அவர்களுக்கு அர்யானா என்ற ஒரு மகள் உள்ளார். ஆர்யா- சாயிஷா தம்பதியினர் தங்களது நான்காவது திருமண நாளை நேற்று கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள சாயிஷா, ‛‛நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையின் காதலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். பொறுமை, வலிமை மற்றும் … Read more

நடிகையாகும் பிரபல இயக்குனரின் மகள்

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மையம் ஆகிய படங்களையும், பல விளம்பர படங்களை இயக்கியவர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன். தற்போது இவருடைய மகள் சரஸ்வதி மேனன், சினிமாவில் கதாநாயகியாக களமிறங்குகிறார். வசந்த் ரவி நடிக்க உள்ள அஸ்வின்ஷ் எனும் புதிய படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தருண் தேஜா இயக்குகிறார். இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யுடியூபர்கள் குழுவைச் … Read more

Suriya 42: அன்பான பேன்ஸ் ரெடியா.. 'சூர்யா 42' படக்குழுவின் அடுத்த தரமான செய்கை.!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சிறுத்தை சிவா இந்தப்படத்தை இயக்கி வருகிறார். வீரம், அண்ணாத்த போன்ற குடும்ப செண்டிமென்ட் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் சிவாவுடன் முதன்முறையாக சூர்யா கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ‘சூர்யா 42’ படத்தின் மிரட்டலான போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். … Read more