நான் நயன்தாராவை சொல்லவில்லை – மாளவிகா மோகனன் விளக்கம்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவருக்கும், நடிகை நயன்தாரா இடையே ஒரு மறைமுக பனிப்போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, ‛‛ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நடிகை ஒருவர் நடித்ததார்'' என நயன்தாரா பெயரை … Read more

Captain Miller: தனுஷ் படத்துக்காக தீயாய் வேலை செய்யும் அருண் மாதேஸ்வரன்: எகிறும் எதிர்பார்ப்பு.!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பகிர்ந்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தனுஷ். கடந்தாண்டு இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் … Read more

பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, சந்திரமுகி 2, AK 62 – லைகாவின் லைன்அப் குறித்த அப்டேட்ஸ்!

தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரித்த நிறுவனங்கள், தயாரிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் லைகாவையும் சொல்லலாம். ‘பொன்னியின் செல்வன் – 1’ படத்துக்குப் பின் மளமளவெனப் பல படங்களைத் தயாரித்து வருகிறது அந்நிறுவனம். விஜய்யின் ‘கத்தி’ மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த லைகா, இப்போது இரண்டு டஜன் படங்களைத் தாண்டி தயாரித்துவிட்டது. அதன் அடுத்தடுத்த லைன் அப்கள் பிரமிக்க வைக்கிறது. தயாரிப்பிலிருக்கும் படங்கள் குறித்த தகவல்கள் இனி… பொன்னியின் செல்வன் … Read more

யாதும் ஊரே யாவரும் கேளிர் – விஜய் ஆண்டனி

தமிழகத்தில் தற்போது வட இந்தியர்கள் அதிக அளவில் குடியேறி வருகிறார்கள். குறைந்த சம்பளத்தில் அவர்கள் வேலை செய்வதால் எல்லா இடத்திலும் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் இதற்கு எதிராக சில அமைப்புகள் இப்போது கொடி பிடிக்கின்றன. வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பதால் தமிழர்கள் பிற்காலத்தில் பெரும் பிரச்சினகைளை சந்திக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். கர்நாடகாவில், மும்பையில், கேரளாவில் பெரும் அளவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் இந்தியவர்கள் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்று ஒரு தரப்பினர் கூறி … Read more

Kavin: பீஸ்ட்க்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனம்: நெல்சன் அண்ணாக்கிட்ட கத்துக்கிட்டது இதுதான்.!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் கவின். இதனையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் போட்டியாளராக நுழைந்த இவருக்கென்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிகழ்ச்சிக்கு பின் லிப்ட், ஆகாச வாணி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது கவின் நடிப்பில் ‘டாடா’ படம் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கியுள்ள இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. … Read more

அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் கேமியோ ரோலில் அல்லு அர்ஜூன்?

இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அறிமுகப் படத்தை இயக்கி வரும் இயக்குநர் அட்லீயின் ‘ஜவான்’ படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அட்லீ. அதன்பின்னர், நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்புக் கிடைக்க, இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, … Read more

லால் சலாம் படத்திற்கு 7 நாட்கள் கால்சீட் கொடுத்த ரஜினி

நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை அடுத்து தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க போகிறார். விஷ்ணு விஷால் , விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், லால் சலாம் என்ற ஒரு முஸ்லிம் வேடத்தில் நடிக்கிறார். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு பாட்ஷா படத்தில் முஸ்லிமாக நடித்த ரஜினி அதன் பிறகு இப்போது மீண்டும் அப்படி ஒரு … Read more

மணிரத்னமின் பலே திட்டம்: 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் வேறலெவல் அப்டேட்.!

கடந்தாண்டு வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் மிகபெரிய சாதனை படைத்த படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவான இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். முதல் பாகம் கடந்தாண்டு வெளியானதை தொடர்ந்து இந்தாண்டு இரண்டாம் பாகம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் புரோமோஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் படமானது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், … Read more

வட மாநிலத்தவர் பிரச்னையில் விஜய் ஆண்டனி ட்வீட்… மக்களின் மனவோட்டம் என்ன?

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன.  சமீபத்தில் மதுரையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில், வட மாநிலத்தவர்களின் வருகையை எதிர்த்து போஸ்டர் ஒட்டப்பட்டது. வட மாநிலங்களில் இருந்து சாரசாரையாக மக்கள், ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு வருவதாக வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதை தொடர்ந்தே, பல்வேறு பேச்சுகள் வெளிவரத்தொடங்கின.  “யாதும் ஊரே யாவரும் கேளிர்” கூற்றின் அடிப்படையில் உங்கள் … Read more

கிரிக்கெட் உலக பிரபலத்துடன் சஸ்டிகா ராஜேந்திரன்

தனியார் மியூசிக் தொலைக்காட்சியில் சுட்டித்தனமாக காமெடி கலந்து ஆங்கரிங் செய்து வந்த சஸ்டிகா ராஜேந்திரனுக்கு குழந்தைகளும், இளைஞர்களும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இடையில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகையான சஸ்டிகா, சந்தானத்துடன் பாரீஸ் ஜெயராஜ் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் திடீரென ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக களத்தில் குதித்த சஸ்டிகா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 என்கிற டி20 கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். அவர் தற்போது கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் … Read more