Thunivu: துணிவு ரிசல்ட்..அஜித்தின் தற்போதைய மனநிலை இதுதானாம்..!

அஜித் மற்றும் வினோத்தின் கூட்டணியில் உருவான துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியானது. இவர்கள் கூட்டணியில் இதுவரை நேர்கொண்டப்பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணியில் துணிவு படம் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்னதான் அப்படம் வசூல் ரிதியாக வெற்றிப்படம் என சொன்னாலும் கலவையான விமர்சனங்களே வந்தது. Thalapathy 67: தளபதி 67 படத்தில் விக்ரம் நடிக்கிறாரா? பதில் … Read more

'மது, சிகரெட், மாமிசம்… இந்த மூணும் இருக்கே' – ஹெல்த் சீக்ரெட் சொல்லும் ரஜினி

Rajinikanth Health Secret: சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் “சாருகேசி”  நாடகத்தை பார்வையிட்டு, விரைவில் அந்த நாடகம் திரைப்படமாக்கப்பட உள்ள அறிவிப்பையும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜன. 26) வெளியிட்டார். பின்னர் சாருகேசி நாடகத்தில் நடித்த நடிகர்களையும் கௌரவித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மேடை பேசியபோது, “கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் ‘ரகசியம் பரம ரகசியம்’ நாடகம் பார்க்க சென்ற நான், அரை மணி … Read more

'ஒய்.ஜி.எம்-க்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை' – மேடையில் நெகிழ்ந்த ரஜினிகாந்த்

“கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கம் வைத்துக் கொண்டிருந்த என்னை ஒழுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றியவர் என்னுடையை மனைவி லதா தான்” எனக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் “சாருகேசி”  நாடகத்தை பார்வையிட்டு, விரைவில் அந்த நாடகம் திரைப்படமாக்கப்பட உள்ள அறிவிப்பையும் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். பின்னர் சாருகேசி நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களை கௌரவித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மேடை பேசியபோது, “47 ஆண்டுகளுக்கு … Read more

Rajinikanth: எப்படி இதெல்லாம் சாப்பிடுறாங்க.. சிகரெட், மது அளவே இல்லை: ரஜினி ஓபன் டாக்.!

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சனுடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இதையெல்லாம் தாண்டி பாக்ஸ் ஆபிசிலும் வசூல் சாதனை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் முழுமையாக திருப்தி … Read more

சர்வானத்திற்கு நிச்சயதார்த்தம்

எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் காதலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகரான சர்வானந்த். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள இவருக்கு விரைவில் திருமணம் என சமீபத்தில் தகவல் வந்தது. இந்நிலையில் சாப்ட்வேர் இன்ஜினியரான ரக் ஷிதா ரெட்டிக்கும் இவருக்கும் இன்று(ஜன., 26) ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். திருமணம் தேதி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரும்.

துப்பறியும் போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடிக்கும் கண்ணூர் ஸ்குவாட்

மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மம்முட்டி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் அவர் இப்படி எல்லாம் கூட எளிமையான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்கிற ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு எளிய கிராமத்து மனிதனாக அந்த படத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இதற்கு நேர் மாறாக துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் … Read more

ஷாருக்கானின் பதான் குறித்து கமல்ஹாசன் போட்ட டுவீட்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. அதையடுத்து நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது அவர் நடித்துள்ள பதான் என்ற படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நாயகியாகவும், ஜான் ஆபிரகாம் வில்லனாகவும் நடிக்க, சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் காவி நிறத்தில் பிகினி உடை … Read more

விஜய் 67வது படத்தின் அப்டேட் எப்போது? : லோகேஷ் தகவல்

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை தற்போது இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாரிசு படம் திரைக்கு வந்ததும் விஜய் 67வது படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் … Read more

"தாமரைக்குளம் டூ தலைநகரம்" – ஸ்டன்டில் கோலோச்சிய ஜூடோ ரத்தினம்

தமிழ் சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1500 படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றிய இவர், வயது மூப்பு காரணமாக குடியாத்தத்தில் இன்று(ஜன., 26) மாலை 4:30 மணியளவில் காலமானார். சினிமாவில் இவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம் உயிரை பணயம் வைத்து, நிஜத்தில் பல சாகசங்கள் புரிந்து திரையில் தோன்றும் கதாநாயக நடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் … Read more

மூத்த ஸ்டன்ட் இயக்குனர் ஜூடோ கே.கே ரத்தினம் மறைவு

தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனது அதிரடியான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த மூத்த ஸ்டன்ட் இயக்குனர் ஜூடோ கே.கே ரத்தினம்(93) வயதுமூப்பால் காலமானார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம். 1959ல் தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் 1966ல் வல்லவன் ஒருவன் படம் மூலம் ஸ்டன்ட் இயக்குனராக மாறினார். அந்தக்கால சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனேக நடிகர்களின் படங்களுக்கு ஸ்டன்ட் … Read more