இயக்குனரும், நடிகருமான ராம்தாஸ் மாரடைப்பால் மறைவு
தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகருமான ராம்தாஸ்(66) மாரடைப்பால் சென்னையில் காலமானார். விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட இ.ராம்தாஸ் சினிமா ஆசையில் சென்னை வந்தார். ஆரம்பத்தில் பிஎஸ் நிவாஸ், மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மோகன், சீதா நடித்த ‛ஆயிரம் பூக்கள் மலரட்டும்' படம் மூலம் இயக்குனராக களமிறங்கினார். தொடர்ந்து ‛ராஜா ராஜாதான்' போன்ற படங்களை இயக்கியவர் பல படங்களுக்கு கதை, திரைக்கதையும் எழுதினார். ஒருக்கட்டத்தில் நடிகராக களமிறங்கிய இவர், ‛‛ வசூல்ராஜா எம்பிபிஎஸ், யுத்தம் செய், காக்கிச்சட்டை, … Read more