மீண்டும் போலீஸ் கதையை கையில் எடுக்கும் ஹரி

அருண் விஜய் நாயகனாக நடித்த யானை படத்தை அடுத்து விஷாலை வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறார் ஹரி. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை படங்களில் நடித்த விஷால் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைகிறார். இதற்கு முன்பு விக்ரம் நடித்த சாமி, சாமி 2 மற்றும் சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் படங்களின் மூன்று பாகங்களையும் போலீஸ் கதையில் இயக்கிய ஹரி, தற்போது விஷாலை வைத்து இயக்கும் புதிய படத்தையும் போலீஸ் … Read more

மீண்டும் துவங்குகிறது வணங்கான் படப்பிடிப்பு?

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா அதையடுத்து வணங்கான் படத்தில் கமிட்டாகி முதல் கட்ட படப்பிடிப்பிலும் நடித்து வந்தார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில் அப்படத்தின் கதை தனக்கு பிடிக்காததால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் சூர்யா. இதையடுத்து பாலா வெளியிட்ட அறிக்கையில், நானும் சூர்யாவும் கலந்து பேசி வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக் … Read more

நேரடி தெலுங்கு படத்தில் சூர்யா

நடிகர் சூர்யா இப்பொழுது பிஸியாக அவரது 42-வது படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதை சிவா இயக்குகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விரைவில் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா . இதனிடையே தமிழ் நடிகர்கள் பலர் தெலுங்கு தயாரிப்பாளர் படங்களில் நடிப்பது டிரெண்ட் ஆகியுள்ளது. விஜய் (வாரிசு), தனுஷ் (வாத்தி), சிவகார்த்திகேயன் (பிரின்ஸ்) இவர்களை தொடர்ந்து இந்த வரிசையில் சூர்யாவும் நேரடி தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் இவர் நடிக்க இருக்கும் இப்படத்தை சீதா … Read more

வெற்றியின் ‛மெமரீஸ்' மார்ச் 10ல் ரிலீஸ்

மலையாள தயாரிப்பாளர் சிஜூ தமீன்ஸ் தயாரிக்கும் தமிழ் படம் 'மெமரீஸ்'. இதனை மலையாள இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷியாம் பர்வீன் இயக்குகிறார். மலையாள நடிகை பார்வதி அருண் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன வெற்றி, தனன்யா, ரமேஷ் திலக், ஹரீஷ் பெரடி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ஷியாம் பர்வீன் கூறியதாவது: வெற்றி, 'ஜீவி' படத்தில் நடிக்கும் முன்பே இந்த படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம். கொரோனா காலத்தால் சற்று தாமதமாகி … Read more

மீண்டும் காஷ்மீர் செல்லும் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படப்பிடிப்பு தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா , பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின் என பலர் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பி நிலையில், விஜய் மற்றும் திரிஷாவும் ஒரு சிறிய பிரேக்கிற்காக சென்னை திரும்பி இருந்தார்கள். தற்போது இயக்குனர் … Read more

அல்லு அர்ஜூன் புதிய படம் அறிவிப்பு

'புஷ்பா 'படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான நடிகராகிவிட்ட அல்லு அர்ஜூன், தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசீரிஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் பூஷண் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா, அல்லு அர்ஜூன் இணைந்து வெளியிட்டனர். இதுவும் பெரிய பட்ஜெட்டில் … Read more

ஏகே 62 படத்திற்காக அஜித் எடுத்த திடீர் முடிவு

துணிவு படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இந்த படத்தை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய உலக சுற்றுப்பயணத்தை தொடங்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் 62வது படத்தின் கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு, தற்போது மகிழ் திருமேனி இயக்குனராகி இருப்பதால் ஏற்கனவே திட்டமிட்டத்தை விட படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது. அதோடு கதை மற்றும் நடிகர் – நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால் … Read more

Ayothi Review: மனிதத்தை பேசும் 'அயோத்தி ' படம் சொல்ல வருவது என்ன.?: முழு விமர்சனம்.!

நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது சசிகுமாரின் அயோத்தி படம். அடல்ட் காமெடி படமாக நேற்று பகீரா, பல்லு படாம பார்த்துக்க படங்கள் வெளியானது. அத்துடன் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘அரியவன்’ என்ற படமும் வெளியாகியுள்ளது. இதனிடையில் சசிக்குமார் நடிப்பில் ‘அயோத்தி’ படம் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக வெளியான சசிக்குமாரின் படங்கள் அனைத்தும் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையில் … Read more

அபிக்கு தேசிய விருது : சுசீந்திரன் நம்பிக்கை

சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான தொடர் அயலி. அறிமுக இயக்குனர் முத்துகுமார் இயக்கி இருந்தார். 1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரத்தில் இருக்கும் வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் நிகழும் கதையே இந்த அயலி. இந்த கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் வாழ்கின்றனர். அங்கிருக்கும் பழமை வாதிகள் மக்களை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறார்கள். பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் படிக்கக் கூடாது, கோயிலுக்குள் செல்லக் கூடாது, உடனே திருமணம் செய்ய … Read more

மீண்டும் தமிழில் வெளிச்சத்திற்கு வரும் சுவாசிகா

சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் லப்பர் பந்து என்கிற படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மலையாள நடிகை சுவாசிகா விஜய் நடிக்கிறார். மலையாள திரையுலகில் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சுவாசிகா தமிழுக்கு ஒன்றும் புதியவர் அல்ல. சொல்லப்போனால் இவர் சினிமாவில் … Read more