Leo: லியோ இப்படித்தான் இருக்கும்..இயக்குனரின் அப்டேட்டால்அதிகரித்த எதிர்பார்ப்பு..!

தற்போது தமிழ் திரையுலகில் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் அம்சங்களை சேர்ந்திருந்த லோகேஷ் இம்முறை விஜய்யை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் இயக்கிவருகிறார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. AK62: விஜய் – அஜித்திற்காக மோதிக்கொண்ட ரசிகைகள்..!அதுக்குன்னு இப்படியா ? இதையடுத்து இப்படத்தில் த்ரிஷா … Read more

ரிஸ்க் எடுக்காதவர் வாழ்க்கை முட்டாளுக்கானது! குழந்தைகளிடம் இதை சொல்லுங்க!-தம்பி ராமையா

எந்த தாய் தந்தையும் ஜெயித்து விட்டு வா என கூறமாட்டார்கள், ரிஸ்க் எடுக்காதவர் வாழ்க்கை முட்டாளுக்கு சொந்தமானது, குழந்தைகளுக்கு தன்னைத் தானே காதலிக்க கற்றுக் கொடுங்கள் என திரைப்பட நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கிரீன் ஆப்பிள் கிட்ஸ் என்ற தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். … Read more

வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை – பூஜா ஹெக்டே

தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. மூன்று மொழிகளில் முன்னணி நடிகை என்றாலும் கடந்தாண்டு இவருக்கு வெற்றியான ஆண்டாக அமையவில்லை. தமிழில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் வெளியான ராதே ஷ்யாம், ஹிந்தியில் வெளியான சர்க்கஸ் போன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை. இது அவருக்கு வருத்தம் தான் என்றாலும் அதை பெரிதாக எடுக்காமல் நேர்மறையான சிந்தனையுடன் முன்னோக்கி செல்கிறார். தொடர் தோல்வி குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது : ‛‛வாழ்க்கையில் நம் … Read more

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்'

'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'குட் நைட்' என பெயரிடப்பட்டுள்ளனர். நாயகியாக மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் இந்தப்படம் தயாராகி உள்ளது. இயக்குநர் கூறுகையில், '' குறட்டையை … Read more

டாடா படக்குழுவை வாழ்த்திய கமல்

சின்னத்திரை நடிகரான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தொடர்ந்து ‛லிப்ட்' படத்தில் நாயகனாக நடித்தார். இப்போது ‛டாடா' என்ற படத்தில் நடித்துள்ளார். அபர்ணா தாஸ் நாயகியாக நடித்துள்ளார். கணேஷ் கே பாபு இயக்கி உள்ளார். நேற்று வெளியான இந்தப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் கவின். இதுபற்றி, 'இன்று கோவிலுக்கு சென்றேன்' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் கவின் தவிர்த்து டாடா படக்குழுவும் கமலை சந்தித்து … Read more

Malavika Mohanan, Nayanthara: லேடி சூப்பர் ஸ்டாரா? மீண்டும் நயன்தாராவை சீண்டிய மாளவிகா மோகனன்!

நடிகை நயன்தாராவை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். நடிகை நயன்தாராதமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், ஜெயரம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ​ சினேகாவின் அசர வைக்கும் எத்னிக் கலெக்ஷன்ஸ்!​ … Read more

”பிசினஸ் இருக்க இடத்துல நேர்மை இருக்காது” – ’கடைசி விவசாயி’க்காக வருந்திய அ.வினோத்! ஏன்?

துணிவு படம் வெளியாவதற்கு முன்பு வரை பேட்டிகள், நேர்காணல்கள் தலை காட்டாமல் இருந்த அ.வினோத், துணிவு படத்திற்கு பிறகு பல நேர்காணல்களில் அவரை காண முடிந்தது. குறிப்பாக தன்னுடைய வாழ்க்கை முறை, சமூக பொருளாதாரம் என பல பரிமாணங்களை பற்றி பேசியதும் சினிமா ரசிகர்களை மிகவும் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், வாரிசு, துணிவு படங்களுக்கு கொடுத்த வரவேற்பை கடைசி விவசாயி படத்துக்கும் கொடுத்திருக்க வேண்டும் என இயக்குநர் அ.வினோத் பேசியிருந்ததுதான் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பரவலாக … Read more

லியாவில் என்னை வேறு மாதிரி பார்ப்பீங்க… – அர்ஜூன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே நடந்து வருகிறது. விஜய் உடன் திரிஷா, சஞ்சய் தத், கதவும் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லோகேஷின் பாணியில் அதிரடி கலந்த கேங்ஸ்டர் படமாகவும், போதை பொருள் தொடர்பான படமாகவும் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். விஜய் உடன் முதன்முறையாக நடிப்பது குறித்து அர்ஜூன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛லோகேஷின் … Read more

ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகிறது ‛த்ரிஷ்யம்'

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளியான படம் ‛த்ரிஷ்யம்'. சூப்பர் ஹிட்டான இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் ரீ-மேக் ஆனது. சிங்களம், சீனா உள்ளிட்ட சில வெளிநாட்டு மொழிகளிலும் இந்தப்படம் ரீ-மேக் செய்யப்பட்டது. தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கு, ஹிந்தியிலும் ரீ-மேக் ஆனது. இந்நிலையில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆக உள்ளது. இந்தப்படத்தின் இந்திய மொழிகள் அல்லாத … Read more

Suriya 42: சரித்திர கதைக்காக வெறித்தனமாக தயாராகும் சூர்யா: தீயாய் பரவும் வீடியோ.!

‘சூர்யா 42’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தை வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பேமிலி சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட கமர்சியல் படங்களை இயக்கிய சிவா இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப்படத்திற்காக சூர்யா வேறலெவலில் தயாராகி வருவது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 3டியில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தேவி ஸ்ரீ … Read more