Varisu vs Thunivu: இது 'துணிவு' பட ஒப்பீடு அல்ல: 'வாரிசு' பட பிரபலம் பரபரப்பு பதிவு.!

கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. அதே போல் ‘வாரிசு’ படம் அதே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டு வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ‘துணிவு’ படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன், தர்ஷன், அமீர், பாவனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள … Read more

திருமணத்திற்கு முன்பே 31 குழந்தைகளுக்கு தாயான ஹன்சிகா!

கடந்த டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா. அதையடுத்து தேனிலவுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றவர் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்தார். இந்நிலையில் வருகிற 20ம் தேதியிலிருந்து இடைவிடாமல் படங்களில் தான் நடிக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு தற்போது தனது கைவசம் ஏழு படங்கள் மட்டுமின்றி 2 வெப் தொடர்களும் இருப்பதாகவும் கூறும் ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் நான் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அது … Read more

Thalapathy 67: தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோ..ஏன் தெரியுமா ?

விஜய் தற்போது வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார். வம்சியின் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி படமாகவே அமைந்தது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக லோகேஷின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார். விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷ் விஜய்யை இயக்குவதால் ரசிகர்கள் ஆவலாக இப்படத்தை எதிர்பார்த்து … Read more

தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து ராயன் என்ற படத்தை இயக்கவிருக்கும் தனுஷ், அப்படத்தில் தானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க … Read more

Varisu, Vamshi: ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல்பெர்க் கூட தியாகம், ஹார்ட் ஒர்க்ன்னு புல்லரிக்கல… வம்சியை வச்சு செய்யும் ப்ளூ சட்டை!

சினிமா எடுப்பது ஒன்றும் வேடிக்கையான விஷயம் இல்லை என கொந்தளித்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளியை வச்சு செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். வம்சி பைடிப்பள்ளிதெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் வம்சி பைடிப்பள்ளி. 2009ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான முன்னா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வம்சி பைடிப்பள்ளி தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார். தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது என பல விருதுகளை குவித்துள்ளார் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி. இந்நிலையில் … Read more

மீண்டும் அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி!

தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டேர் வீரய்யா என்ற படம் சமீபத்தில் சங்கராந்திக்கு திரைக்கு வந்துள்ளது. அதையடுத்து தமிழில் அஜித் நடித்து வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‛போலா சங்கர்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை அடுத்து மீண்டும் அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க போவதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும், இதற்கு முன்பு தமிழில் விஜய் … Read more

Thunivu: விஜய் மாமியார் வீட்டு ஏரியாவில் துணிவு புது சாதனை: அஜித்தும் கில்லி தான்

Ajith: இங்கிலாந்தில் துணிவு படம் படைத்த புது சாதனை குறித்து அறிந்த அஜித் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். துணிவுஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் வில்லத்தனம் கலந்து நடித்த துணிவு படம் ஜனவரி 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் நல்லவிதமாக விமர்சித்தார்கள். இது படத்திற்கு பக்கபலமாக அமைந்துவிட்டது. பொங்கல் விடுமுறை முடிந்து, வார நாட்களில் கூட துணிவு படத்தின் வசூல் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் துணிவு அந்த சாதனையை படைத்திருக்கிறது. … Read more

ஹாலிவுட் படத்தில் நடிக்க விரும்பும் ஜூனியர் என்.டி.ஆர்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த ‛ஆர்.ஆர்.ஆர்' படம் உலக அளவில் மெகா ஹிட் ஆனது. அந்த படத்தில் இடம்பெற்ற ‛நாட்டு நாட்டு' பாடலுக்கு உயரிய கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஜூனியர் என்டிஆர் அளித்த பேட்டி: எனக்கு ஹாலிவுட் மார்வெல் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. அந்த … Read more

Varisu: தமிழ்நாட்டிலும், எல்லா கண்டத்திலேயேும் வசூலில் வாரிசு தான் ஃபர்ஸ்ட்: ரவீந்தர் சந்திரசேகரன்

Vijay, varisu collection: தமிழகத்திலும் சரி அனைத்து கண்டங்களிலும் சரி வாரிசு படம் துணிவை முந்திவிட்டது என்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். பொங்கல் ரிலீஸ்இந்த பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் குமாரின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் ஜனவரி 11ம் தேதி ரிலீஸானது. வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்தது. இதையடுத்து 7 நாட்களில் உலக அளவில் ரூ. 210 கோடி வசூல் செய்திருக்கிறது நண்பா என … Read more

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்

சமீபத்தில் கேரளாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ‛தங்கம்' படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சட்டக் கல்லூரியில், அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அவர், பின்னர் அபர்ணாவை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார். மாணவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, அங்கிருந்து விலகினார். அந்த மாணவர் பின்னர் மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்டதோடு, தான் ஏன் அவ்வாறு … Read more