சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட்

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் 800 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை செய்தது. இப்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பி.வாசு. சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா … Read more

தர்மேந்திரா, அமிதாப், முகேஷ் அம்பானி வீடுகளுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

நாக்பூர்: பாலிவுட் முன்னணி நடிகர்கள் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோரின் வீடுகளுக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா …

சிக்கலில் மிர்ச்சி சிவா படம்

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காசேதான் கடவுளடா. கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து தயாரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இரு முறை ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டும் இன்னும் இப்படம் வெளியாகவில்லை. இந்த படத்தை தயாரிக்க ராஜ்மோகன் என்பவரிடம் 1.75 கோடி … Read more

அகிலன் படத்துக்கு யுஏ சான்று

பூலோகம் படத்தை அடுத்து கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் அகிலன். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. சாம் சி .எஸ் இசையமைத்துள்ள இந்த அகிலன் படத்தின் டிரைலர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அகிலன் படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இது … Read more

ஜூனியர் என்டிஆரை புறக்கணிக்கவில்லை ; ஹாலிவுட் விருதுக்குழு விளக்கம்

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஜமவுலியின் முந்தைய பாகுபலி படத்தை விட இந்த படம் வெளிநாட்டு ரசிகர்களாலும் ஹாலிவுட் பிரபலங்களாலும் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல பல சர்வதேச விருதுகளையும் வென்று ஆஸ்கர் ரேஸிலும் நுழைந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இந்த படத்திற்கு நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன இந்த … Read more

படம் பார்க்க கெஞ்சிய தயாரிப்பாளர் : 50 கோடி அள்ளிக்கொடுத்த ரசிகர்கள்

கடந்த வருடம் மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான மூன்று படங்கள் 50 கோடி முதல் 100 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்த வருடம் துவங்கி இரண்டு மாதங்கள் முடிய உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மலையாளத்தில் வெளியான ரொமான்சம் என்கிற படம் தற்போது இந்த வருடத்தின் முதல் படமாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. சித்து மாதவன் இயக்கிய இந்தப்படத்தை ஜான் பால் ஜார்ஜ் என்பவர் … Read more

விஜய்யின் ‘லியோ’ படத்தை மிஞ்சிய ‘சூர்யா 42’? – ப்ரீ ரிலீஸ் வியாபாரம் குறித்து கசிந்த தகவல்

விஜய்யின் ‘லியோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தை சூர்யாவின் ‘சூர்யா 42’ திரைப்படம் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் -கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகினார். மேலும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ … Read more

விஷ்ணுவின் நவீன அவதாரமாக உருவாகி வரும் பிரபாஸின் புராஜெக்ட் கே

பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களை மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் என இரண்டு படங்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை திருப்திப்படுத்த தவறி தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார், ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் சலார் படத்திற்கான … Read more

'அரியவன்' படத்தை நான் இயக்கவில்லை : மித்ரன் ஜவஹர் திடீர் அறிவிப்பு

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தற்போது இயக்கி உள்ள படம் 'அரியவன்'. ஈஷான் நாயகனாகவும், பிராணலி நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் நாளை மறுநாள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மித்ரன் ஜவஹர் அரியவன் படத்தை நான் இயக்கவில்லை. என் உதவியாளர்தான் இயக்கினார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது “அரியவன் திரைப்படத்தை எனது உதவியாளர் ஒருவர்தான் இயக்கினார். கதை … Read more

Selvaraghavan: எங்கே போய் தேடுவேன்… வேதனையில் இயக்குநர் செல்வராகவன்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் செல்வராகவன். துள்ளுவதோ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இயக்குநர் செல்வராகவன், தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் செல்வராகவன். Radhika Sarathkumar: விஜய் அப்பாவுடன் ஜோடி சேரும் ராதிகா சரத்குமார்… லேட்டஸ்ட் தகவல்! கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் செல்வராகவனின் தம்பியான நடிகர் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு … Read more