பீனிக்ஸ் விமர்சனம்: MMA களம், ஆனால் ஏமாற்றும் திரைக்கதை… உயரப் பறக்கிறதா இந்த ஆக்‌ஷன் சினிமா?

எம்.எல்.ஏ கரிகாலனை (சம்பத் ராஜ்) பட்டப்பகலில் கொடூரமாக க் கொலை செய்கிறான் பதின்பருவ இளைஞன் சூர்யா (சூர்யா சேதுபதி). இந்தக் கொலைக்கான காரணம் என்ன, இதனால் வரும்  எதிர்வினைகளை சூர்யாவால் சமாளிக்க முடிந்ததா என்பதே ‘பீனிக்ஸ்’ படத்தின் கதை. அறிமுக நாயகன் சூர்யா சேதுபதி, இளம் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) வீரராக வருகிறார். அந்த விளையாட்டுக்குத் தேவையான உடற்தகுதியுடன் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல்வாகு கைகொடுக்கிறது. இருப்பினும், நடிப்பில் தன்னை நிரூபிக்கப் … Read more

Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" – ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!

ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. சுரேஷ் ரெய்னா இதுவரை சின்ன சின்ன விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் ரெய்னா. பாலிவுட்டை தாண்டி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதே சுரேஷ் ரெய்னாவின் விருப்பமாக இருக்கிறது. Suresh Raina ரெய்னா நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகன் இயக்குகிறார். DKS என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் திரைப்படமாக இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு நிகழ்வு இன்று … Read more

2025ல் இதுவரை 122 படங்கள் ரிலீஸ்! ஆனா..6 மட்டும் ஹிட்-என்னென்ன தெரியுமா?

Hit Tamil Films Of 2025 In First 6 Months : 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 122 படங்கள் வரை ரிலீஸாகி இருக்கின்றன. ஆனால், அதில் 6 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படி வெற்றிப்பெற்ற படங்கள் எவை தெரியுமா?  

`அசத்தும் செல்வா – யுவன் கூட்டணி, '7ஜி ரெயின்போ காலனி 2' டீசர்' – ஹீரோ அண்ணன் சொல்லும் அப்டேட்

காதலுக்காகவும், இதயத்தை இதமாக்கும் பாடல்களுக்காகவும் கொண்டாடப்பட்ட படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. கடந்த 2004ம் ஆண்டு வெளியானது. படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு ‘நிஜ உலகத்தை நெருங்கிப் பார்த்து படமெடுக்க வந்திருக்கும் தமிழ் சினிமா இயக்குநர்களின் தரமான பட்டியலில் இவரும் இடம் பிடிக்கிறார்’ என்று பாராட்டுக்கள் குவிந்த படம் இது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது. 7ஜி ரெயின்போ காலனி ‘7ஜி ரெயின்போ காலனி 2’ முதல் பாகத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் … Read more

ராமாயணம் படத்திற்காக நடிகை சாய் பல்லவி வாங்கிய டபுள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

Best Movies of Sai Pallavi : நேச்சுரல் பியூட்டி என்று அழைக்கப்படும் சாய் பல்லவி தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். தற்போது இவரது சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

Paranthu Po: "முதல்முறை என் படத்த பார்த்து சிரிச்சுட்டே வெளிய வர்றாங்க" – இயக்குநர் ராம் நெகிழ்ச்சி!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நகரத்தில் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் சிறுவன், ஒருநாள் தந்தையுடன் வெளியில் செல்ல வாய்ப்புகிடைக்கிறது. தந்தை – மகன் இருவரும் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் பயணம் செல்லும்போது அவர்களுக்குள் என்னவெல்லாம் நடந்தது. மகன் அன்புவின் சேட்டைகள். அதனுள் இருக்கும் சுதந்திர குணம் என சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லுவதாக இதன் கதைக்களம் அமைந்திருக்கிறது. … Read more

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு

லவ் மேரேஜ் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 

Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா

இந்தியத் திரையுலகின் நடிகைகளில் மிகவும் கவனம் பெற்றவர் நடிகை சமந்தா. தொடர்ந்து வாழ்வின் பல்வேறு சிக்கல்களில் சிக்கி, அவ்வப்போது அது தொடர்பாக தன்னை ஆசுவாசப்படுத்தி எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். திருமணம் உறவு, உடல் நலம், உடற்பயிற்சி எனப் பல்வேறு விவகாரங்களில் எது குறித்தும் மனம் திறந்து பேசிவிடும் பழக்கமுடையவர். சமீபத்தில் அவரின் மார்க் சீட் வெளியாகி வைரலானது. சமந்தா இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப்பேட்டியில், தன் காதலருக்காக பச்சைக் குத்திக்கொண்டது … Read more

Paranthu Po Review : இளம் பெற்றோர்களுக்கு முக்கிய படம்..பறந்து போ படத்தின் திரைவிமர்சனம்!

Paranthu Po Movie Review Tamil : ராம் இயக்கத்தில் மிர்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான், அஞ்சலி நடித்துள்ள பறந்து போ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

3BHK விமர்சனம்: மிடில்கிளாஸ் போராட்டத்தின் வலி; டிராவிட் ஃபேனும், தோனி ஃபேனும் வென்றார்களா?

சென்னையில் ஒரு லோடு கம்பெனியில் கணக்கராகப் பணிபுரியும் வாசுதேவன் (சரத்குமார்), தனது மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்) ஆகியோருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மொத்த குடும்பமும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நெஞ்சில் சுமந்து ஓடுகிறது. அதற்கான சேமிப்புத் திட்டங்களும் போடப்படுகின்றன. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் இத்யாதி பிரச்னைகள் அவர்களின் சேமிப்பைக் காலி செய்கின்றன. இதற்கு மத்தியில் இவர்கள் கனவு ஜெயித்ததா என்பதை உணர்வுபூர்வமான … Read more