Thalapathy 67: தளபதி 67 படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதுதான்..வெளிப்படையாக பேசிய நடிகர்..!

தற்போது தமிழ் திரையுலகத்தில் அனைவரது பார்வையும் தளபதி 67 படத்தின் மீது தான் உள்ளது. அதற்கு மிகமுக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். என்னதான் தளபதி 67 விஜய் படமாக இருந்தாலும் அவர் லோகேஷுடன் இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. லோகேஷின் கதை சொல்லும் விதமும், அவரின் படங்களில் வரும் கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து அவர் இயக்கும் படங்களில் வரும் … Read more

HBD Simbu: நள்ளிரவில் சிம்புவின் பர்த்டே ட்ரீட்: சம்பவம் செய்த ஏ.ஆர். ரஹ்மான்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் சிம்பு, கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குநர் என திரைத்துறையில் தனது பன்முகத்திறமையை வெளிபடுத்தியவர். சிம்பு என்றாலே வம்பு என்ற நிலை மாறி தற்போது சினிமாவில் மிஸ்டர் பர்பெக்ட் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சிம்பு. சமீபத்தில் உடல்எடை காரணமாக அதிகம் விமர்சிக்கப்பட்ட நடிகர் என சிம்புவை சொல்லலாம். அந்தளவிற்கு இவரின் தோற்றம் கேலி செய்யப்பட்டது. இதற்கெல்லாம் … Read more

Rajini: ரஜினிக்கு வந்த திடீர் ஆசை..ஜெயிலர் கதையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..!ஒர்கவுட் ஆகுமா ?

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிக்ரு வெற்றிகளை பெறவில்லை. குறிப்பாக அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தை மிகவும் நம்பியுள்ளார். Thalapathy 67: விஜய்க்கு அந்த படங்கள் பிடிக்காது..கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன்..SAC ஓபன் டாக்..! இதைத்தொடர்ந்து … Read more

RIP K Viswanath: பிரபல மூத்த இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவு: திரையுலகினர் பேரதிர்ச்சி.!

‘கலா தபஸ்வி’ என அழைக்கப்படும் பிரபலமான இயக்குநர் கே.விஸ்வநாத். தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். திரைத்துறையில் பழம்பெரும் கலைஞரான விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலாமாகியுள்ளார். அவருக்கு வயது 93. கடந்த 1957 ஆம் ஆண்டில் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை துவங்கினார் கே. விஸ்வநாத். 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். தனது முதல் படத்திற்கே நந்தி விருது பெற்றார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம், சலங்கை … Read more

பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

இந்தியத் திரையுலகின் பழம்பெரும் இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 92. இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). 1965-ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ‘ஆத்ம கவுரவம்’ படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் … Read more

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

சங்கராபரணம் உள்ளிட்ட பல அற்புதமான படங்களை இயக்கிய, இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான, கே.விஸ்வநாத்(93), வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இழப்பு, இந்திய திரையுலகை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.விஸ்வநாத். தெலுங்குத் திரையுலகத்தில் பல அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியவர். 1965ம் ஆண்டில், இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ‛ஆத்ம கவுரவம்' படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார். தொடர்ந்து அவர் … Read more

விஜய் மில்டன் படத்தில் ஷாம்

நடிகர் ஷாம் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் பிஸியாகி வருகிறார். சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரராக நடித்தார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஷாம். இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்னும் சில முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்காக ஷாமுடன் பேச்சுவார்த்தை … Read more

பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்!

சின்னத்திரை இயக்குநர் பிரவீன் பென்னட் விஜய் டிவியில் பல ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் 'பாரதி கண்ணம்மா' தொடர் பல நாட்கள் டிஆர்பியில் நம்பர் 1 ஆக இருந்து வந்தது. தொடரின் நாயகி ரோஷினி ஹரிப்ரியன், வில்லி வெண்பா மற்றும் கண்மணி ஆகியோர் சீரியலை விட்டு அடுத்தடுத்து வெளியேறினர். இதன்காரணமாக மொத்தமாக சறுக்கிய பாரதி கண்ணம்மா தொடர் ஒருவழியாக தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பான க்ளைமாக்ஸில் பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, கவிஞர் சினேகன் அவரது … Read more

ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா

பிரபலமான ஹாலிவுட் வெப் தொடர் 'சிட்டாடல்'. பிரியங்கா சோப்ரா, ஸ்டேன்லி டுச்சி, ரிச்சர் மேட்டன் நடித்துள்ள இந்த தொடர் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்த தொடரின் இந்தியன் வெர்சனை அமேசான் ப்ரைம் வீடியோ தயாரிக்கிறது. இதனை தி பேமிலி மேன் தொடரை இயக்கிய இரட்டையர்களான ராஜ்,டிகே இயக்குகிறார்கள். இதில் பிரியங்கா சோப்ரா நடித்த கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். அவருடன் வருண் தவான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்தியா, செர்பியா, தென் ஆப்பரிக்கா நாடுகளில் நடக்கிறது. இது … Read more

இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனு இன்று (பிப்.2) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் வரி விதிப்பது தொடர்பான நோட்டீஸ்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் அளிக்க இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிற்கும், வரி விதிப்பை எதிர்த்து ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்ய ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.