அஜித்தின் கதாபாத்திரம் மர்மமாகவே இருக்கட்டும்: மனம்திறந்த வினோத்

இயக்குனர் சிவாவுக்கு பிறகு, அஜித் நடிக்கும் படங்களை தொடர்ந்து இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனர் ஆகவே மாறிவிட்டவர் எச்.வினோத். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரித்துள்ளார். மஞ்சுவாரியர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படம் குறித்து சில தகவல்களை மனம் திறந்து … Read more

சூடுபிடிக்கும் நகைச்சுவை நடிகர் பட டைட்டில் விவகாரம்

மலையாளத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. சமீபகாலமாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுராஜ், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ஹேம்நாத் என்பவரது டைரக்ஷனில் சுராஜ் நடித்துள்ள ‛ஹிகுடா' என்கிற படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று கூறி கேரள பிலிம்சேம்பர் உத்தரவிட்டுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை … Read more

நடிகை காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தினா!

சின்னத்திரையில் சித்தி , அண்ணாமலை, மெட்டிஒலி உட்பட பல தொடர்களுக்கு இசையமைத்தவர் தினா. அதன் பிறகு சினிமாவிலும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் அவரது இசையில் உருவான மன்மதராசா பாடல் மற்றும் விஜய் நடித்த திருப்பாச்சியில் இடம்பெற்ற கும்பிட போன தெய்வம் உள்ளிட்ட பல பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி எடுத்தன. இந்த நிலையில் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த கட்சியின் போராட்டங்கள் … Read more

தனுஷ்-க்கு அண்ணனாக நடிக்கும் நடிகர் சிவராஜ்குமார்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 16ம் தேதி குற்றாலத்தில் துவங்க இருக்கிறது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் … Read more

Suriya: `பாலா அண்ணா உடன் துணை நிற்போம்' – இயக்குநர் பாலாவுக்கு பதிலளித்த 2 டி நிறுவனம்

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இயகுநர் பாலா, “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் … Read more

எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டேன்: ராஷ்மிகா வெளிப்படை

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போதைய நிலையில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய்யுடன் அவர் நடித்த வாரிசு திரைப்படம் அடுத்த மாதம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அமிதாப் பச்சனுடன் அவர் இணைந்து நடித்த அவரது முதல் ஹிந்திப்படமான குட்பை வெளியானது. அடுத்ததாக மிஷன் மஞ்சு என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சேனல் ஒன்றில் அவர் பேட்டி அளித்தபோது, நான் அவ்வளவு எளிதில் எனது உணர்ச்சிகளை … Read more

வைரவன் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் பிரபல நடிகர்!!

உடல்நலக்குறைவால் மரணமடைந்த நடிகர் வைரவனின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிகுழு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன் உட்பட பலர் நடித்து இருந்தனர். மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன். … Read more

2வது திருமணம் செய்து கொள்கிறேனா? மீனா கொடுத்த விளக்கம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மீனா, ரஜினி,கமல், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியான த்ரிஷ்யம் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, தெலுங்கில் சன் ஆஃப் இந்தியா, தமிழில் ரவுடி பேபி, மலையாளத்தில் ஜனம்மா டேவிட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  … Read more

பாலிவுட்டுக்கு ‛சர்க்கஸ்' புது தெம்பை தரும் ; பூஜா ஹெக்டே நம்பிக்கை

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியான அல வைகுந்தபுரம்லோ படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்ததுடன் அதில் புட்டபொம்மா என்கிற ஹிட் பாடலுக்கு ஆடியதன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பூஜா ஹெக்டே. ஆனால் இந்த வருடம் பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா என அவர் நடித்த படங்கள் எல்லாமே வரிசையாக தோல்வியை தழுவின. இந்த நிலையில் ஹிந்தியில் அவர் நடித்துள்ள ‛சர்க்கஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 23ம் … Read more

பாலாவுக்கு பலத்த அடி?… வணங்கானிலிருந்து வெளியேறினார் சூர்யா… என்னதான் நடந்தது?

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா, இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் … Read more