வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் விபத்து! சண்டை பயிற்சியாளர் பலி

வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு படமாக்கப்பட்ட ஒரு … Read more

புதுமுகம் அறிமுகம் – நடிகை கோபிகா உன்னிகிருஷ்ணன்

பஞ்சுப் பாதங்களை முத்தமிட பாயும் அலைகள், நீயே அழகியென சத்தமிட உயிர் பெற்றிடும் சிலைகள்… மண்ணில் உலாவும் என்றுமே தேயாத அழகு நிலா, துள்ளி திரியும் மான் இனங்களில் நீ மிளா, இளசுகளின் இதயங்களுக்கு வலை வீசும் கூந்தல், கனவுகளை களவாடும் கண்கள்… என கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் கோபிகா உன்னிகிருஷ்ணன் மனம் திறக்கிறார்…இவ்வளவு அழகாக இருக்கீங்களே எங்கே இருக்கீங்ககேரளாவில் என் சொந்த ஊர் திருச்சூரில் தான் இருக்கேன்… மலையாள டிவி சேனல்களில் … Read more

ஜெயம் ரவியின் அகிலன் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி போனது

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண கிருஷ்ண இயக்கத்தில் உருவான படம் அகிலன். இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் காரணமாக அகிலன் படத்தை கிறிஸ்துமஸ்க்கு தள்ளி வைத்தார்கள். ஆனால் தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததாக சொல்லி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகிலன் படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி … Read more

அஜித் இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் யோகிபாபு! மாஸ் அப்டேட்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்தப் படத்துக்கு போட்டியாக விஜய்யின் வாரிசு படமும் வர இருக்கிறது. கோலிவுட்டின் பெரிய ஸ்டார்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோத இருப்பதால் ரசிர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும், … Read more

மகன் லிங்காவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ‛3', கவுதம் கார்த்திக் நடித்த ‛வை ராஜா வை' போன்ற படங்களை இயக்கியவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி. 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனுசை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த ஐஸ்வர்யா, அதன்பிறகு திரைப்படம் இயக்குவதில் தனது ஆர்வத்தை திருப்பி இருக்கிறார். அந்த வகையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி விஷ்ணு விஷால், விக்ராந்தை வைத்து ‛லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. ஏ .ஆர். ரகுமான் இசையமைக்கும் … Read more

துணிவு – இரட்டை வேடமா நெகட்டிவ் ரோலா?… ஹெச். வினோத் ஓபன் டாக்

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. அஜித்தும், வினோத்தும் இணைந்த முதல் இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. அதற்கு காரணம் சிலரின் தலையீடு படத்தில் இருந்ததாகவும் அதனால்தான் அவ்வாறு ரிசல்ட் வந்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றன என்பதை மறுக்க முடியாது. … Read more

‛என் திமிரான தமிழச்சி' : காதலியை அறிமுகப்படுத்திய தெருக்குரல் அறிவு

என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றவர் தெருக்குரல் அறிவு. இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி ரெய்டு' பாடலின் மூலம் பிரபலமானார். தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் தெருக்குரல் அறிவு தற்போது தான் காதலில் விழுந்ததை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள … Read more

வெப் சீரிஸில் விஜய் சேதுபதி – இயக்குநர் யார் தெரியுமா?

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். குறும்படங்கள் இயக்கிக்கொண்டிருந்த அவர் காக்கா முட்டை மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்தார். அதனையடுத்து அவர் விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கினார். இந்தப் படத்தி விஜய் சேதுபதியுடன் யோகிபாபுவும் நடித்திருந்தார். வறுமையின் காரணமாக வெளிநாடு செல்ல ஏங்கும் இளைஞர்களின் வாழ்வியலை பதிவு செய்திருந்தது இப்படம். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. குறும்பட காலத்திலேயே நண்பர்களாக இருந்த விஜய் … Read more

`தளபதி முதல்வர்… நான் அமைச்சர், இவரு எம்.எல்.ஏ!’- பதவி பிரித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்!

திரைப்படத் துறையில் 30 ஆண்டுகளை கடந்த நடிகர் விஜய் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் எனவும், திரைத்துறையில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நடிகர் விஜயின் ரசிகர்கள் யாகம் வளர்த்து அன்னதானம் வழங்கி பூஜை செய்துள்ளனர். 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாளைய தமிழ்நாட்டின் முதல்வரே என போஸ்டர் அடித்துக் கொண்டாட்டம். தமிழக திரைத்துறையில் நடிகர் விஜய், 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் … Read more

இன்னொரு சிவா மனசுல சக்தி: வரலாறு முக்கியம் படம் குறித்து ஜீவா பேச்சு

ஜிப்ஸி, 83 படங்களுக்கு பிறகு ஜீவா நடிப்பில் திரைக்கு வரும் படம் வரலாறு முக்கியம். சந்தோஷ் ராஜன் இயக்கி உள்ள இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி நாயகியாக நடிக்க, வி.டி.வி. கணேஷ், கே .எஸ். ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் ஜீவா பேசுகையில், ஏற்கனவே நான் நடித்த சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை … Read more