2022 தமிழ் சினிமா – டாப் 10 டிரைலர்கள்

தமிழ் சினிமா உலகம் மட்டுமல்லாது, உலக சினிமா, இந்திய சினிமா ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இந்த 2022ம் ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இந்த ஆண்டில் மீண்டும் ஒரு பரபரப்பு, மோதல், விவாதம், சர்ச்சை, பிரச்னை என செய்திகளுக்குப் பஞ்சமில்லாத விதத்தில் இந்த ஆண்டு முடிய உள்ளது. ஒரு படத்திற்கு முன்னோட்டமாக விளங்கும் டீசர், டிரைலர் ஆகியவை இந்த ஆண்டிலும் நிறையவே … Read more

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை வெளியிட மறுப்பு? – திடீரென எழுந்த சிக்கலுக்கு என்ன காரணம்?

நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரைப்படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், திட்டமிட்டப்படி இந்தப் படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘மாயா’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ரோகித் சுரேஷ் சரஃப், ஹனியா நஃபீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரர் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ … Read more

காசேதான் கடவுளடா பாடல்…. டிரோல்களை ரசித்தேன் என்கிறார் மஞ்சுவாரியர்

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகி உள்ள ஹாட்ரிக் திரைப்படம் ‛துணிவு'. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வருகிற பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் முதல் பாடலாக 'சில்லா சில்லா' வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது வரை 20 … Read more

தமிழக அரசு அதை செய்ய ஒருநாள் போதும் – விஷால் ஓபன்டாக்

விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் 22 ஆம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கும் அவர், படம் ரிலீஸையொட்டி புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், ” தமிழ்நாட்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். அவர்களின் நடத்தைதான் போலீசின் கவுரவத்தை தீர்மானிக்கிறது. போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்களை பற்றித்தான் நிறைய படங்கள் வந்திருக்கிறது. கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை, அவர்களது பணிச்சூழல், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் … Read more

சிவகார்த்திகேயன் படத்தில் அவதார் டெக்னீசியன்கள்

பிரின்ஸ் படத்திற்கு பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக இயக்குனர் மிஷ்கினும் நடிக்கிறார்கள். இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் காலதாமதம் ஆகி வருவதாக இயக்குனர் ரவிக்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் … Read more

பதான் பிகினி சர்ச்சை : 'உங்க மகள் கூட சேர்ந்து…' ஷாருக்கிற்கு ஷாக் கொடுக்கும் பாஜக!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் பதான் திரைப்படத்தின் பெஷாராம் ராங் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் யூ-ட்யூபில் வெளியானது. அந்த பாடலில், நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் நடனமாடுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒரு காட்சியில் தீபிகா காவி நிறத்திலான பிகினியை அணிந்துள்ளார்.  தொடர்ந்து, காவி நிறத்தில் ஆபாச உடைகளை அணிந்து, காவியின் மதிப்பை கொச்சைப்படுத்துவதாக கூறி பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இதை … Read more

காவி உடையில் கவர்ச்சி : ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்கு

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பதான் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக ஆடியிருந்தது வைரலாக பரவியது. அதோடு காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா படுகோன் நடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. இதனால் பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. காவி … Read more

தெலுங்கு பட ரீமேக் விவகாரம்: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் உரிமையை தான் வாங்கவில்லை என  நடிகர் விஜய் சேதுபதி தரப்பு விளக்கத்தை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான ‘உப்பெனா’ படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, … Read more

ஆடியோ நிறுவனம் தொடங்கிய பாடகர் அந்தோணி தாசன்

நாட்டுப்புற பாடகரும், இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, 'போக் மார்லி ரெக்கார்ட்ஸ்' என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார். இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு பாடகி சித்ரா பேசியதாவது: அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு … Read more