விதி: தமிழ் சினிமாவின் விபரீதமான மரபை உடைத்த படம்; சுஜாதாவின் நடிப்பு, கே.பாக்யராஜின் அந்த கேமியோ!
இன்றைய காலகட்டத்தை ஒப்பிடும் போது எண்பதுகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தன. எனவே மக்கள் சினிமாவைப் பார்ப்பது மட்டுமல்லாமல் ‘கேட்கவும்’ செய்தார்கள். ஆம், சினிமாவின் கதை வசனங்களை ‘ஒலிச்சித்திரமாக’ கேட்டு மகிழ்வது அப்போதைய டிரெண்டாக இருந்தது. அந்த வரிசையில் புகழ்பெற்ற சினிமா என்றால் அது ‘திருவிளையாடல்’தான். அது கோயில் விழாவாக இருந்தாலும் சரி, காதுகுத்து நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதன் எல்.பி.ரிகார்டை ஒலிக்க விடுவார்கள். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதைக் குறிக்கும் வகையில் ‘டொடடாய்ங்’ … Read more