'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு..!
சென்னையில், ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ரோப் அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் ‘விடுதலை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கேளம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரோப் அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. Source link