மீண்டும் ஆக்ஷன் படத்தில் விஜய்சேதுபதி

டாப் ஹீரோக்களுக்கு வில்லன், குணசித்ரம், சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது மீண்டும் பக்கா ஆக்ஷன் படத்திற்கு வருகிறார். இந்த படத்தை விதார்த், பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்குகிறார். நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அஜ்னீஸ் லோக்நாத் இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் பற்றி இயக்குநர் நித்திலன் கூறும்போது, “இது ஆக்ஷன் … Read more

Suriya 42: 'சூர்யா 42' படம் குறித்து தீயாய் பரவிய வதந்தி: படக்குழு அதிரடி விளக்கம்.!

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘சூர்யா 42’ . வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பேமிலி சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட கமர்சியல் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. மேலும், ‘சூர்யா 42’ படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யா 42’ படம் 3டியில் உருவாகி வருகிறது. தேவி ஸ்ரீ … Read more

”மீண்டும் க்ளாஷ் விட இந்த கதை செட் ஆகாது”-விக்னேஷ் சிவனின் கதையை கிடப்பில் போட்டாரா அஜித்?

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் தளபதி 67 மற்றும் ஏகே 62 குறித்த பதிவுகளாகவே இருக்கின்றன. விஜய்யின் தளபதி 67 குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் அஜித்தின் 62வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  லோகேஷ் கனகராஜின் தளபதி 67-ல் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜூன் உட்பட திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த படத்தின் மீதான ரசிகர்களின் … Read more

தஞ்சாவூரில் புதுவீடு கட்டும் நீலிமா இசை!

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான நீலிமா இசை திருமணத்திற்கு பின் பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக மாறிவிட்டார். தவிரவும் சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். தற்போது தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு கிராமத்தில் சொந்தவீட்டை கட்ட ஆரம்பித்துள்ள நீலிமா, பூமி பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நீலிமாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Thalapathy 67: விஜய்யால் தான் நான் மாறினேன்..வெளிப்படையாக பேசிய SAC ..!

தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் செய்யும் வசூல் சாதனைகளை பற்றி அனைவருக்குமே தெரியும். என்னதான் இவரின் படங்களின் விமர்சனங்கள் முன்ன பின்ன இருந்தாலும் ரசிகர்களின் பேராதரவினால் வசூல் ரீதியாக விஜய்யின் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெரும். அதற்கு எடுத்துக்காட்டாக விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான இரு படங்களை சொல்லலாம். பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரிதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களாக … Read more

ஷாருக் பற்றி தீபிகா

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான ‘பதான்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தீபிகா படுகோனுடனான கெமிஸ்ட்ரி குறித்து ஷாருக்கான் கூறுகையில், ‘என்னையும், …

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ்

மலையாள குணசித்தர நடிகர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசப், சார்லி, நாயாட்டு, ஆக்ஷன் ஹீரோ பிஜூ, மதுரம், ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, நஜன் மாரிக்குட்டி, ஜூன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழில் ஜெகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்தார். இந்த நிலையில் ஜோஜூ ஜார்ஜ் இரட்ட என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இயக்குநர் ரோஹித் எம்ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் அஞ்சலி, ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபு மோன், அபிராம், சரத் சபா, ஷெபின் … Read more

Poorna Baby Shower: நடிகை பூர்ணா கர்ப்பம்… கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு!

நடிகை பூர்ணாவின் வளைக்காப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நடிகை பூர்ணாகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தையில் பகுதியை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காஸிம் என்ற தனது பெயரை சினிமாவுக்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பூர்ணா, தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் என்ட்ரி … Read more

நானிக்கு வந்த கோபம்

நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரீனா வஹாப் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘தசரா’. இப்படத்தின் டீசரை எஸ்.எஸ்.ராஜமவுலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்‌ஷித் ஷெட்டி இணைந்து வெளியிட்டனர். தீமைக்கு …

67 வயதில் மோகினியாட்டம் அரங்கேற்றம் செய்த மஞ்சுவாரியரின் அம்மா

மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் கூட அவர் நடித்த துணிவு மற்றும் ஆயிஷா என இரண்டு படங்கள் வெளியாகின. இப்போதும் அறிமுக இளம் நடிகை போல இளமையுடனும் சுறுசுறுப்புடனும் நடித்து வரும் மஞ்சுவாரியரை பார்த்து இவரது இளமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் இவரது தாயாரான கிரிஜா மாதவன் தற்போது தனது … Read more