பெண்களின் எழுச்சி – சமந்தா பதிவு

சினிமா என்பது ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையாகவே காலம் காலமாக இருந்து வருகிறது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வரும். ஆனால், கடந்த வருடக் கடைசி வெளியீடாக கடந்த வாரம் வெளிவந்த படங்களில் 'ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட்' ஆகிய படங்கள் ஹீரோயின்களை முதன்மைப்படுத்திய படங்களாக வெளிவந்தன. அதற்கு முன் வாரம் நயன்தாரா நடித்த 'கனெக்ட்' படமும் அப்படிப்பட்ட ஒரு படம்தான். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள பிரபலமான … Read more

ஹிமாலயாவில் புத்தாண்டு கொண்டாடிய மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் என இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் மற்றும் மலையாளத்தில் கிறிஸ்டி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல்கள், கடற்கரை என புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட மாளவிகா மோகனன் ஹிமாலயா பக்கம் சென்று அமைதியாக தனது புத்தாண்டு தினத்தின் … Read more

ஸ்படிகம் இயக்குனருடன் புத்தாண்டை கொண்டாடிய மோகன்லால்

மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த எவர்கிரீன் படங்களை வகைப்படுத்தினால் அதில் மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தில் லாரி டிரைவரான மோகன்லால் தனது வேட்டியை கழட்டி எதிரிகளை அட்டாக் பண்ணும் காட்சியும், தனது லாரியில் இருந்து ஸ்டைலாக குதித்து மாஸ் காட்டும் காட்சியும் ரொம்பவே பிரசித்தம். பிரபல இயக்குனர் பத்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இவர் எந்த அளவிற்கு இந்த படத்தின் மீது அபிமானம் கொண்டிருந்தார் என்றால் பின்னாளில், அதாவது சில வருடங்களுக்கு முன்பு தனது மகனுக்கு … Read more

போதை வழக்கு காரணமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த மலையாள படம் நீக்கம்?

மலையாள திரையுலகில் புருவ அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக அறிமுகமான படம் ஒரு அடார் லவ். ஒமர் லுலு இயக்கியிருந்தார். அதற்கு முன்பு அவர் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் இந்த படம் அவரை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் தற்போது நல்ல சமயம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஒமர் லுலு. இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது. அதேசமயம் படத்தில் அரசால் தடை … Read more

அது உண்மையல்ல – போனி கபூர் பதிவு

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்தார். ஏழு கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், இவானா, ராதிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். லவ் டுடே படத்தின் … Read more

கமல்ஹாசனை இயக்க ராஜமவுலி வாய்ப்பு?

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படம் நான்கு பாகங்கள் வரை உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்படத்திற்கு கதை எழுதி வரும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் சில தினங்களுக்கு ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் கமல்ஹாசனும் ராஜமவுலியும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க ராஜமவுலி பேசி உள்ளதாகவும் தகவல் … Read more

சமந்தாவின் சாகுந்தலம் பிப்ரவரி 17ல் ரிலீஸ்!

சமந்தா கதையின் நாயகியாக நடித்த யசோதா படம் சமீபத்தில் வெளியான நிலையில் குஷி, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது சாகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படம் கடந்த நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தாமதமாவதாக சொல்லி ரிலீஸ் செய்தியை ஒத்தி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் சாகுந்தலம் படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வருவதாக … Read more

சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது ஏன்? – ஸ்ருதிஹாசன் அளித்த அதிரடி பதில்

சிரஞ்சீவி உடன் வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீர சிம்ஹா ரெட்டி, பிரபாஸ் உடன் சலார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவற்றில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள படங்கள் வருகிற சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்த ஒரு பேட்டியில் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், நடிப்பு துறையில் வயது குறைந்தவர்கள் வயது அதிகமானவர்கள் என்ற வித்தியாசம் … Read more

இசைக்கு பார்வை குறைபாடு பொருட்டல்ல.. 30 இசைக்கருவிகளை வாசித்து அசத்தும் காட்சன் ரூடுல்ஃப்!

பார்வை குறைபாடுடைய வளரும் இசை கலைஞர் காட்சன் ரூடுல்ஃப். அவர் கிட்டத்தட்ட 30 இசைக்கருவியை வாசித்து வருகிறார். இவரது தந்தை ஒரு கட்டிட வடிவமைப்பாளர். இவர் சிறு வயதில் தனது கைப்பேசியில் இசையை இசைத்ததும் இசையின் மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த இவரது தந்தை இவருக்கு முறையாக இசை பயிற்சி அளிக்க இவருக்கான இசைபள்ளியை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அதே சமயம், இவருக்கு இசையின் மேல் உள்ள ஆர்வத்தால், தனது இசை கருவியைக்கொண்டு தானாக இசையை … Read more

விஜய்யின் 67 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைகின்றனர். அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் … Read more