இந்தியில் ரீமேக் செய்யப்படும் ‘லவ் டுடே’ – இவர்தான் ஹீரோவா?; வெளியானத் தகவல்!

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கோமாளி’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த திரைப்படம் ‘லவ் டுடே’. கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், எதிர்பார்ப்பை மீறி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சுமார் 5 முதல் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம், 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, கடந்த 2022-ம் ஆண்டில் … Read more

தெலுங்குப் படங்களை விட அதிக தியேட்டர்களில் 'வாரிசு'

விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படம் பொங்கலுக்கு தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு தயாரித்துள்ளார். அதனால், அவர் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நேரடித் தெலுங்குப் படங்களை விட 'வாரிசு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரிசுடு' படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே தெலுங்குத் திரையுலகத்தில் கடும் சர்ச்சை எழுந்தது. … Read more

விஜய்யின் ‘பீஸ்ட்’ Vs அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் எது அதிக வியூஸ் – ரசிகர்கள் ட்ரோல்!

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெய்லர், விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ட்ரெயிலரின் சாதனையை முறியடித்துவிட்டதாகவும், அதேநேரத்தில் அப்படியெல்லாம் முறியடிக்கவில்லை என்றும் வழக்கம்போல் இருவரின் ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர். அஜித்தின் 61 படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம், (டிசம்பர் 31-ம் தேதி, 2022) இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லரைக் கண்டு அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். … Read more

ராஷ்மிகாவைப் புறக்கணிக்கும் 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி

'வாரிசு' படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் கன்னடத்தில்தான் அறிமுகமானார். 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தில்தான் ராஷ்மிகாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் ரிஷப் ஷெட்டி. அந்தப் படம் வெளிவந்து டிசம்பர் 30ம் தேதியுடன் ஆறு வருடங்கள் நிறைவடைந்தது. அதை முன்னிட்டு அப்படத்தின் படப்பிடிப்புப் புகைப்டங்கள் சிலவற்றைப் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி, “'கிரிக் பார்ட்டி' வந்து ஆறு வருடங்கள் ஆன பிறகும் உங்கள் சத்தமும், சலசலப்பும், விசில் … Read more

#BIG NEWS: பிரபல அவெஞ்சர்ஸ் நடிகர் கவலைக்கிடம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி

மார்வெல் படங்களில் ‘ஹாக் ஐ’ சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த ஜெரமி ரெனர் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹாக் ஐ, தி அரைவல், அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஜெரமி ரெனர், விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இன்று காலை அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டின் தன் வீட்டின் முன் குவிந்திருந்த பனியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் … Read more

சமந்தாவின் ‘சகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான ‘ருத்ரமாதேவி’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. காளிதாசன் எழுதிய புராணக் கதையான சகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘சாகுந்தலம்’ படம் உருவாகியுள்ளது. சகுந்தலை வேடத்தில் சமந்தாவும், மன்னன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட காதல் கதையைத் தான் படக்குழுவினர் பீரியட் … Read more

'பீஸ்ட்' சாதனையை முறியடிக்காத 'துணிவு' டிரைலர்

2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 'துணிவு' படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு யுடியூபில் வெளியானது. 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளையும், 1.1 மில்லியன் லைக்குகளையும் பெற்றது. இருப்பினும் விஜய்யின் 'பீஸ்ட்' டிரைலர் சாதனையை 'துணிவு' டிரைலரால் முறியடிக்க முடியவில்லை. 'பீஸ்ட்' டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்தியா மொழித் திரைப்படங்களில் அதிக வேகத்தில் 30 … Read more

Varisu Trailer : வாரிசு டிரைலர் வர தாமதம் ஏன்… இவர்தான் காரணமா?

Varisu trailer release date : இன்னும் பொங்கலுக்கு சுமார் 2 வாரங்கள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களில், இரு உச்ச நச்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்கிற்கு வர உள்ளது. கடைசியாக வீரம் – ஜில்லா ஆகிய திரைப்படங்களை ஒன்றாக ரிலீஸ் செய்த அஜித் – விஜய், இம்முறை துணிவு – வாரிசு படங்களை ஒன்றாக வெளியிட உள்ளனர்.  இதில், விஜய் நடிப்பில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தை … Read more

கொஞ்சம் ஹேர் ஸ்டைல் சரி பண்ணுங்க! விஜய்க்கு அட்வைஸ் செய்த பிரபலம்!

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடைபெற்றது.  பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் நடைபெறாததால் வாரிசு படத்திற்கு பிரமாண்டமாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சி புத்தாண்டு அன்று டிவியில் ஒளிபரப்பப்பட்டது.  இந்நிலையில், இந்த இந்நிகழ்ச்சி குறித்தும், விஜய்யின் தோற்றம் குறித்தும் தொலைக்காட்சி பிரபலம் ஜேம்ஸ் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார்.  தனது முகநூல் பக்கத்தில், “வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். … Read more

இணையத்தில் வெளியான மகளின் ஆபாச புகைப்படங்கள், கொந்தளித்த சீரியல் நடிகை

பிரவீணா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் குரல் கலைஞர் ஆவார். ஏஷ்யாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மியத்தில் பார்வதி தேவி பாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார். இது இந்தியாவின் மிக நீண்ட புராணத் தொடராகும். இவர் பல மலையாளப் படங்கள் மற்றும் பல முன்னணி தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி மற்றும் துணைப்பாத்திரங்களில் நடித்துவருகிறார். சாதனைக்கு மேல் சாதானை 1992 ஆம் ஆண்டு கௌரி திரைப்படத்தின் மூலம் இவர் நடிப்புத் தொழிலுக்கு வந்தார். 1998 ஆம் ஆண்டில் … Read more