கோல்டன் குளோப் விருது: நாமினேஷன் பட்டியலில் 2 பிரிவுகளில் இடம் பிடித்த ‘ஆர்.ஆர்.ஆர்.’

2022-ம் வருடத்திற்கான கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இடம்பிடித்து அசத்தியுள்ளது. 2022-ம் ஆண்டு முடிந்து, 2023-ம் ஆண்டு துவங்க இன்னும் 19 நாட்களே உள்ளன. இதையடுத்து இந்த ஆண்டு வெளிவந்த சிறந்தப் படங்களை தேர்ந்தெடுத்து, விருது வழங்கும் விழா உலகெங்கிலும் நடைபெற உள்ளது. குறிப்பாக திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association வழங்கும் … Read more

தமிழ்ப் படங்களுக்குக் கட்டுப்பாடு கூடாது – தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு

பொங்கல், தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மற்ற மொழிப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. 2023 பொங்கலுக்கு தமிழ்ப் படமான 'வாரிசு' படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரிசுடு' படத்தை ஆந்திரா, தெலங்கானாவில் அதிக தியேட்டர்களில் வெளியிட அதன் தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டுள்ளார். தியேட்டர் வட்டாரங்களில் பெரும் செல்வாக்குடன் இருப்பவர் அவர். அதனால், பொங்கலுக்கு வெளியாக உள்ள நேரடித் தெலுங்குப் படங்களுக்கு பாதிப்பு வரும் … Read more

ஜப்பானில் ரஜினியின் 24 வருட சாதனையை முறியடித்த ராஜமௌலி – வெளியான தகவல்!

ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் ஜப்பானில் வசூலில் சாதனைப் படைத்து முதலிடம் பிடித்து வந்தநிலையில், தற்போது அந்த சாதனையை ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் தகர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் இந்தியப் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக தமிழ்ப் படங்களில் ரஜினிகாந்தின் படங்களுக்கு தனி மவுசு உண்டு. இதனால்தான் ரஜினியின் நடிப்பில், கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில், கடந்த 1995-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான ‘முத்து’ திரைப்படம், 1998-ம் ஆண்டு ஜப்பானில் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு மாபெரும் வரவேற்பு … Read more

ஜெயிலரில் முத்துவேல் பாண்டியனாக ரஜினி

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛ஜெயிலர்'. சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இன்று(டிச., 12) ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் வீடியோவை வெளியிட்டனர். அதில் முத்துவேல் பாண்டியனாக ரஜினி நடிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த வீடியோவில் வயதான தோற்றத்தில் காணப்படும் ரஜினி டிப் டாப் உடையில் கண்ணாடி அணிந்து கொண்டு, உடலில் நறுமணம் வீசும் திரவியத்தை … Read more

ஆயிஷா பிக்பாஸில் எலிமினேட் ஆனதற்கான 3 காரணங்கள்

பிக்பாஸ் தமிழில் கடந்த வாரம் 2 வாரங்கள் எலிமினேஷன் இருந்தது. சர்பிரைஸாக ராம் மற்றும் ஆயிஷா அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு இந்த எலிமினேஷன் அதிர்ச்சியாக இருந்தாலும், கடந்த வாரம் டபுள் எலிமினேஷ் இருக்கும் என   பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், பிக்பாஸ் டபுள் எலிமினேஷன் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராம் மற்றும் ஆயிஷா ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், ஆயிஷா வெளியேற்றப்பட்டதற்கான 3 காரணங்களையும் சில நெட்டிசன்கள் பட்டியலிட்டுள்ளனர்.  1. ஆசீமை எதிர்த்த … Read more

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முறையாக இணையும் படம்

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரு படத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கதையின் நாயகியாக நடித்துவரும் மாணிக் என்ற படத்தை தமிழ், ஹிந்தியில் தயாரித்து வரும் நட்மெக் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் மலையாளத்தில் அமலாபால் நடித்து வெளியான தி டீச்சர் … Read more

2022-ம் ஆண்டில் எதிர்பார்த்ததை காட்டிலும் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த 6 தமிழ் படங்கள்!

கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கை எல்லாம் மக்கள் மறந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். யாரும் பெரிதாக எதிர்பார்த்திராத இந்த ஊரடங்கு உலகையே புரட்டிப் போட்ட நிலையில், திரையுலகையும் இது விட்டுவைக்கவில்லை. இதனால் மக்கள் ஓ.டி.டி. பக்கம் சென்றுவிட்ட நிலையில், அவர்களை திரையரங்கிற்கு வரவழைப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது. தமிழகத்தில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களின் படங்கள் என்றால், பெரிதாக விளம்பரம் தேவைப்படாமலே திரையரங்குகளில் ரசிகர்கள் … Read more

விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட விஜய் பட வில்லன் நடிகர்

இந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தவர் மலையாள இளம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் பீஸ்ட் படத்தில் தன்னை டம்மி ஆக்கி விட்டதாக ஒரு பேட்டியில் கூட குற்றம் சாட்டியவர், பின்னர் அப்படி கூறியதற்காக வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள பாரத சர்க்கஸ் படம் … Read more

2022ல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ஐஸ்வர்ய லட்சுமி

எல்லா முன்னணி நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார் பொன்னியின் செல்வன் பூங்குழலி. அதாவது ஐஸ்வர்ய லட்சுமி. எதில் முதலிடம் தெரியுமா? அவர்தான் இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர். அவர் நடித்த 9 படங்கள் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. இது ஒரு சாதனை அளவாகும். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நடிகை நடித்த 9 படம் வெளிவரவில்லை என்கிறார்கள். தமிழில் புத்தம்புது காலை விடியாதா, கார்கி, பொன்னியின் செல்வன், கேப்டன், கட்டா குஸ்தி … Read more

Rajini: ஜெயிலர் படத்தில் இவ்வளோ விஷயம் இருக்கா ? ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வந்த ரஜினி சமீபகாலமாக ஒரு ஹிட் படத்திற்காக போராடி வருகின்றார். எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. எனவே ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இதையடுத்து ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் ரஜினி இருக்கின்றார். … Read more