ஜமா விமர்சனம்: `வந்தனம் வந்தனம் கல்யாணம்!' சிலிர்க்க வைக்கும் நடிப்பில் கூத்துக் கலைஞனின் வாழ்க்கை!
திருவண்ணாமலை மாவட்டம் கிராமம் ஒன்றில் தன் தாயுடன் வசித்து வருகிறார் கூத்துக் கலைஞரான கல்யாணம் (பாரி இளவழகன்). கூத்து வாத்தியார் தாண்டவம் (சேத்தன்) தலைமையிலான ‘அம்பலவாணன் நாடக சபை’யில் (ஜமா) திரௌபதி வேடம் கட்டி ஆடுவதை தன் பிழைப்பாக வைத்திருக்கிறார். எப்போதும் பெண் வேடங்களையே ஆடி, தன் மகனுக்குப் பெண் தன்மையுள்ள உடல்மொழி வந்துவிட்டதால் எல்லோரும் பெண் தரத் தயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் அவரது தாய் அம்பு (கே.வி.என் மணிமேகலை), கூத்துத் தொழிலிருந்தே தன் மகனை … Read more