ராஜமவுலிக்கு பரிசு கொடுத்து வாழ்த்திய 83 வயது ஜப்பான் ரசிகை

ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்தாண்டு ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் மரகதமணிக்கு பெற்று தந்தது. அதுமட்டுமல்ல உலக அளவில் அங்கே வருகை தந்திருந்த பல நாட்டு பிரபலங்கள் அனைவரையும் அந்த படம் வசீகரித்தது. மேலும் அதைத் தொடர்ந்து பல நாடுகளில் அந்த படம் மொழிமாற்றம் செய்தும் திரையிடப்பட்டது. குறிப்பாக ஜப்பானில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் … Read more

அங்கிளுக்கு உம்மா கொடும்மா.. குழந்தையை தூக்கிய விஜய்.. கன்னத்தில் விழுந்த க்யூட்டான முத்தம்!

திருவனந்தபுரம்: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நேற்று மலையாளத்தில் பேசி அசத்திய நடிகர் விஜய் ரசிகனின் குழந்தையை தூக்கிக்கொண்டு

சூர்யா முதல் அசோக் செல்வன் வரை; இந்தாண்டு அமேசான் பிரைமில் வெளியாகும் வெப்சீரிஸ், படங்களின் லிஸ்ட்!

அமேசான் பிரைம் நிறுவனம் ஒரு பிரமாண்ட நிகழ்வைச் சமீபத்தில் நடத்தியிருக்கிறது. மும்பையில் நடந்த நிகழ்வில் அடுத்த ஒரு ஆண்டுக்கு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்களையும் சீரிஸ்களையும் குறித்து அறிவித்திருக்கிறது. பிரபல நடிகர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்தாண்டு மட்டும் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் படங்கள், சீரிஸ் என மொத்தமாக 69 வெளியீடுகளைப் பார்வையாளர்களுக்கு எடுத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் படங்களும் வெப் சீரிஸும் வெளியாகின்றன. அந்த … Read more

'மரியான்' மாதிரி இருக்குமா 'ஆடுஜீவிதம்' ?

பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலா பால் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‛தி கோட் லைப் – ஆடுஜீவிதம்'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக மார்ச் 29ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதை, பரத்பாலா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடிப்பில் 2013ல் வெளிவந்த 'மரியான்' படம் போல இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. … Read more

இதெல்லாம் பண்ணி 48 வருஷம் ஆகுது.. நிஜமாவே அந்தர் பல்டி அடித்த அனு ஹாசன்.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: இந்திரா படத்தில் “அச்சம் அச்சமில்லை” பாடலுக்கு நடனமாடி நடித்த அனு ஹாசன் 53 வயதிலும் செம ஃபிட்டாக இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் தான் அனு ஹாசன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்திரா, ஆளவந்தான், நள தமயந்தி,

Ilaiyaraaja Biopic: படத்தில் இணையும் கமல்ஹாசன் – ஆச்சர்யக் கூட்டணி; வெளியான தகவல்!

இளையராஜாவின் பயோபிக் படமாகிறது என்பது தான் இன்றைய தினத்தின் வைரல் செய்தி. இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ் என்பதும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்பதையும் நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. படத்திற்கு ‘இளையராஜா’ என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. Ilaiyaraaja படத்தின் தொடக்க வி்ழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா என திரையுலகத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா இல்லை வேறு ஒருவரா … Read more

காந்தாரா இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் பட நாயகி

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் உருவாகி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் இருந்து வெளியான 'கேஜிஎப்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காந்தாரா திரைப்படத்தின் மூலம் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டியும் தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அடுத்ததாக அவர் 'காந்தாரா லெஜன்ட் ; சாப்டர் 1' என்கிற பெயரில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகளில் தற்போது … Read more

அடிப்படை ஆராய்ச்சி கூட இல்ல.. இளையராஜா பயோபிக் போஸ்டர்.. ப்ளூ சட்டை மாறன் கிளப்பிய பஞ்சாயத்து!

சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள இளையராஜா படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் கையில் ஆர்மோனியம் பெட்டியுடன் சென்னை சென்ட்ரல் நிலையம் அருகில் நிற்பது போலவும் அவர் நிற்கும் இடத்தில் சேறு இருப்பது போல காட்சிப்படுத்தி இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அந்த

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் இன்று காலை நடைபெற்றது.

14 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கங்குவா' டீசர்

சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கங்குவா'. இப்படத்தின் டீசர் நேற்று மாலை யு டியூபில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்திற்கு முன்பாக 14.5 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது. கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் அறிமுக டீசர் வீடியோ 24 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. நேற்று வெளியான டீசர் அந்த சாதனையைக் கடக்குமா என்பது … Read more