New TVS Scooty Zest 110 – 110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

110சிசி சந்தையில் கிடைக்கின்ற பட்ஜெட் விலை ஸ்கூட்டர்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டி ஸெஸ்ட (Scooty Zest) 110 மாடலில் SXC என்ற புதிய வேரியண்ட் சேர்க்கப்பட்டு பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்கள் புதுப்பிக்கப்பட்டு விலை ரூ.72,100 (எக்ஸ்-ஷோரூம்) விலை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக கிளாஸ் மற்றும் மேட் சீரிஸ் என இரு வேரியண்டில் முறையே ரூ.65,400 மற்றும் ரூ.68,800 என கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக ரூ.3,300 விலையில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு ப்ளூடூத் வாயிலாக இணைத்து … Read more

Kantara: `ஆபீஸ் பாய் டு பிரமாண்ட இயக்குநர்' – இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ரிஷப் ஷெட்டி!

கன்னட சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக ரிஷப் ஷெட்டி இன்று பார்க்கப்படுகிறார். யக்ஷகானம் எனும் பாரம்பரியக் கலையில் வேரூன்றி, உடுப்பி மண்ணின் வாசனையைத் திரையில் கொண்டு வந்து, ரசிகர்களை வியக்க வைத்த பெருமை இவரையே சாரும். Rishab Shetty நடிகர், இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் ரிஷப் ஷெட்டி. பி.காம் படிப்பை முடித்துவிட்டு, சினிமா வாய்ப்புக்காக தண்ணீர் கேன் விற்பது போன்ற சிறு வேலைகளைச் செய்து, கண்ட கனவை உறுதியுடன் பின்தொடர்ந்தவர். இவரது … Read more

வரலாறு படைத்தார் கே.எல்.ராகுல்! டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் விசித்திரமான சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்…

டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் விசித்திரமான சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். அவரது சாதனை வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கடந்த 148 வருடத்தில் முதல் முறையாக, கே.எல்.ராகுல் ஒரு விநோத சாதனையை படைத்துள்ளார்.  அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ராகுல் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள்  … Read more

Usain Bolt: "இந்திய உணவுகளில் இதுதான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது" – உசைன் போல்ட்

இந்தியாவிற்கு வந்திருக்கும் தடகள வீரர் உசைன் போல்ட் ‘NDTV’ ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசியிருக்கும் அவர், “14 வருடத்திற்கு முன்பு நான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். அப்போது என்னால் இங்கிருக்கும் உணவுகளைச் சரியாக ருசிக்க முடியவில்லை. அதனால் இந்த முறை இங்குள்ள உணவுகளை ருசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உசைன் போல்ட் முதல் தடவை வந்தபோது மட்டனுடன் ரொட்டி சாப்பிட்டேன். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த இறைச்சி நன்றாக இருந்தது. ஜமைக்காவில் இறைச்சி வேறு … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 1.1 கோடி பேர் பயணம்..!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 1.1 கோடி பேர் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் பேர் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கோடி பேர் பயணம் செய்த நிலையில், தற்போது மீண்டும் ஒருகோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் 1 … Read more

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? – ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. தற்போது உத்தவ் தாக்கரே புதிய கட்சி மற்றும் புதிய சின்னத்துடன் அரசியல் செய்து வருகிறார். தாக்கரே உருவாக்கிய கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டேயிடம் போய்விட்டது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தலைவர்கள் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கடுமையான குற்றச்சாட்டுக்களைச் … Read more

திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு  இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக தினசரி    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே தலைமைச்செயலகம், உயர்நீதிமன்றம் உள்பட பல பகுதிகளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் இல்லம் உள்பட பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், … Read more

தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடி: தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள்…

சென்னை: தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடியுடன் கூடிய  தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கைத்தறி  துறை அமைச்சர் காந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி அக்டோபர் 3ந்தேதி … Read more

கேரளா: காரை கவிழ்த்து, காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகள்

திருச்சூர், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவர் தனது நண்பர்களுடன் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளிக்கு காரில் சுற்றுலா சென்றார். வனப்பகுதியில் உள்ள அதிரப்பள்ளி-மளுக்கப்பாரா சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென என்ஜின் பழுதாகி கார் நடுவழியில் நின்றது. இதையடுத்து அவர்கள் காரை சரிசெய்ய பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், சேவியர் தனது நண்பர்களுடன் தவித்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதாக … Read more