வயநாடு நிலச்சரிவு; முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நிலச்சரிவில் … Read more

இந்தியாவில் ரூ.4.57 கோடியில் லம்போர்கினி உரூஸ் SE விற்பனைக்கு வெளியானது

ரூபாய் 4.57 கோடி விலையில் இந்தியாவில் லம்போர்கினி வெளியிட்டுள்ள புதிய உரூஸ் SE சூப்பர் காரில் 4.0 லிட்டர் V8 பிளக் இன் ஹைபிரிட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா முறைகள் (சாலை மற்றும் ஆஃப் ரோடு பயன்பாட்டிற்காக), மற்றும் நிவி, சாப்பியா மற்றும் டெர்ரா போன்ற ரைடிங் மோடுகளுடன் நான்கு கூடுதல் மோடுகளாக EV டிரைவ், ஹைப்ரிட், ரீசார்ஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸ் என மொத்தமாக 10 மோடுகளை பெற்றுள்ளது. 4.0-லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு … Read more

Tamil News Live Today: பிரேசில் விமான விபத்து… பயணித்த 62 பேரும் பலியான சோகம்

பிரேசில் விமான விபத்து… 62 பேர் பலியான சோகம் பிரேசில் நாட்டில் 62 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வானில் பறந்து கொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. BREAKING: Passenger plane falls out of the sky in Sao Paulo, Brazil according … Read more

மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்! பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலம் ஒரு பதக்கம்

டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இதில்  206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 … Read more

மணிப்பூர்: துப்பாக்கி சண்டையில் 3 பேர் பலி

இம்பால், மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தற்போதும் நீடித்து வருகிறது. இந்த இனக்குழுக்களில் சிலர் குழுவாக இணைந்து தற்போது ஆயுதமேந்தி தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த குழுவினரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், பயங்கரவாத குழுக்கள் இடையேயும் அவ்வப்போது மோதல் சம்பவங்கள் … Read more

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… 19ம் தேதி பழுக்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் தூபம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரும் 19ம் தேதிக்குப் பிறகு துணை முதல்வர் என்று அழைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல் பிராச்சரத்தின் மூலம் தீவிர அரசியலில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 2022 டிசம்பரில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் சினிமாவிற்கு முழுக்குபோட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது இந்த தீவிர அரசியலைப் பார்த்து சீனியர்களே வாயடைத்து போயுள்ள நிலையில் … Read more

ஆட்டுக்கறி வாங்க பணம் கொடுப்பதில் வாக்குவாதம்: கணவனை செங்கலால் அடித்துக்கொன்ற மனைவி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் ஹதுடா கிராமத்தை சேர்ந்தவர் சத்பால் (வயது 45). இவரது மனைவி காயத்ரி தேவி. கணவன் – மனைவி இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்துள்ளது. சத்பால் தனது மனைவியை அவ்வப்போது கடுமையாக தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் ஆட்டுக்கறி வாங்க ரூ. 300 தரும்படி சத்பால் தனது மனைவி காயத்ரியிடம் கேட்டுள்ளார். ஆனால், கணவருக்கு பணம் கொடுக்க காயத்ரி மறுத்து வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியபோது காயத்ரியை … Read more

ECRல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 16 கி.மீ. உயர்மட்ட சாலை திட்டம்…

கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 52 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவான்மியூரில் இருந்து உத்தண்டி செல்லும் சாலையில் ஒரு நாளைக்கு 1.2 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் இந்த சாலையை அகலப்படுத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது. தற்போது 90 அடி அகலம் கொண்ட இந்த சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை … Read more

ஜெகதீப் தன்கர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜெயா பச்சன் எம்.பி. காட்டம்

புதுடெல்லி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் கூறினார். தொடர்ந்து, ஜெகதீப் தன்கர், சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயா பச்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மாநிலங்களவை … Read more

Paris Olympics Live Updates: மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அமன் ஷெராவத் அசத்தல்!

இந்தியாவின் மல்யுத்த ராசி! மல்யுத்தத்தில் இந்தியா 2008 முதல் தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கம் வெல்கிறது. அமன் ஷெராவத் வென்றது எட்டாவது பதக்கம். இந்தியாவுக்கு ஆறாவது பதக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 57 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோ ரிகோ நாட்டு வீரர் டேரியன் க்ரூஸைத் தோற்கடித்து வெண்கலம் வென்றார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அமன் ஷெராவத், தன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். கிடைக்குமா மற்றுமொரு … Read more