நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.! | Automobile Tamilan

நிசான் இந்தியா தனது கார்களின் விலையை வரும் ஜனவரி 1, 2026 முதல் 3 % வரை அதாவது ரூ.17,000 முதல் ரூ.32,000 வரை உயர்த்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாகனத் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யும் மேக்னைட் மற்றும் எக்ஸ்-ட்ரெய்ல் ஆகிய கார்களின் … Read more

ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; "NDA கூட்டணியில் நாங்களா?" – கொதிக்கும் டிடிவி தினகரன்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய அவர், “எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று வதந்திகள் பரவின. அதையெல்லாம் முறியடித்து எம்ஜிஆரைப் படுக்கவைத்துக் கொண்டே வெற்றி பெற வைத்தவர்கள் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள். அப்படிப்பட்ட ஊரில் எம்ஜிஆருக்கு … Read more

தண்டவாளத்தில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர்; வந்தே பாரத் ரயில் மோதியதால் பயணிகள் அதிர்ச்சி

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் காசர்கோடு–திருவனந்தபுரம், மங்களூரு–திருவனந்தபுரம் வழித்தடங்களில் “வந்தே பாரத்” ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு ரயில்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு மற்றும் மதுரைக்கு “ஸ்லீப்பர் வந்தே பாரத்” மற்றும் “நமோ பாரத்” ரயில்களையும் இயக்கும் திட்டம் உள்ளது. இந்த நிலையில், காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று இரவு சென்ற வந்தே பாரத் ரயில், ஒரு ஆட்டோ மீது மோதியது. வர்க்கலா அருகே வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது, … Read more

ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் – அருங்காட்சியகம்; பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நினைவிடம் வளாகத்தில் பா.ஜனதா சித்தாந்தவாதிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இடம்பெற்றுள்ளது. இந்த தேசிய நினைவிடம், அருங்காட்சியகம் மற்றும் தலைவர்களின் … Read more

அனில் அம்பானி மீது 3 வங்கிகள் எடுத்த நடவடிக்கைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை

மும்பை, இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ‘எஸ்’ வங்கி ₹3 ஆயிரம் கோடி கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ₹17 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு … Read more

சீன விசா முறைகேடு வழக்கு: காா்த்தி சிதம்பரம்மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சீன விசா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம்மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தாா். அப்போது பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் அனல் மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தை வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான தல்வன்டி சாபோ மின்சார நிறுவனத்திடம் (டிஎஸ்பிஎல்) மாநில மின்சார வாரியம் அளித்தது. இதைத் தொடா்ந்து, சீனாவின் ஷான்டாங் மின்சார … Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து

புதுடெல்லி, உலகம் முழுவதும் நாளைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;- “நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, … Read more

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்: திமுக கூட்டணி கட்சிகள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்….

சென்னை: மத்தியஅரசு 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டித்து, திமுக உள்பட  கூட்டணி கட்சிகள்  இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள். கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 … Read more

ரூ. 50 கோடி நன்கொடை: திமுக, அதிமுகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் அதிக நன்கொடை

சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும்  லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2024 – 2025-ம் ஆண்டில், திமுகவுக்கு  மார்ட்டின் பங்குதாரராக உள்ள டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனமானது 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. ஏற்கனவே  2019-ல் இருந்து 2024 வரை, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம், திமுகவுக்கு 509 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கயது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே தேசிய கட்சிகளில் … Read more