தலைப்பு செய்திகள்
நியூயார்க்: மேலே தூங்கி விழுந்ததால் ஆத்திரம்… ஓடும் ரயிலில் சக பயணியை ஆக்ரோஷமாகத் தாக்கிய நபர்!
நியூயார்க்கில் ரயில் பயணத்தின்போது, தன் தோள் மேல் தூங்கி விழுந்த நபரை, சக பயணி ஆக்ரோஷமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரயில், பெர்க்சர் சுரங்கத்தில் சென்றபோது நடந்த இந்தச் சம்பவம், பயணிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சக பயணியிடம் ஒருவர் ஆத்திரமடைந்து கத்தி, தகாத வார்த்தைகளில் திட்டி வேறு இடத்துக்குச் சென்று அமருமாறு கூறியிருக்கிறார். உறங்கிக் கொண்டிருந்த அவர், ஏதோ சொல்ல முயன்ற நிலையில், … Read more
தமிழக முதல்வர் தேசிய நல்லாசிரியராகத் தேர்வு பெற்றோருக்கு வாழ்த்து
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேசிய நல்லாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இருந்து 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் … Read more
அடுத்த ஷாக்.. தலித் பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை.. மகன் அடித்து கொலை.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
போபால்: மத்திய பிரதேசத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை வாபஸ் பெறக்கோரி அவரது சகோதரரை அடித்துக்கொன்ற கும்பல், அவரது தாயாரை நிர்வாணமாக்கி கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தலித் சமுதாய மக்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து Source Link
டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள்| Pro-Khalistan slogans at Delhi railway station
புதுடில்லி: டில்லியில் உள்ள 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் மர்ம நபர்கள் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி உள்ளனர். இந்த விவகாரம் கவனத்திற்கு வந்த பிறகு, அதனை அழித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவாஜி பார்க் முதல் பஞ்சாபி பாக் வரையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதி, அதனை வீடியோவாக சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினர், வெளியிட்டுள்ளனர். புதுடில்லி: டில்லியில் உள்ள 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் மர்ம … Read more
தேர்தல் பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு முதல்வர் நிதி உதவி
திருச்சி தேர்தல் நேரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். கடந்த 30.07.2023 அன்று திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு … Read more
திருப்பதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.!
திருப்பதி, திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. வார விடுமுறையான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று மாலை 7 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் குளிர் காற்று வீசியது. தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் குளிரில் … Read more
பிஎம்டபிள்யூ CE 02 எலக்ட்ரிக் பைக் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது
பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள CE 02 எலக்ட்ரிக் மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.2.50 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சிஇ 02 மாடல் சர்வதேச சந்தையில் முதற்கட்டமாக கிடைக்க உள்ளது. BMW CE 02 electric bike ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு … Read more
சோஷியல் மீடியாவில் சித்ரவதை; சகோதரனின் துணையோடு இருவரை அடித்துக் கொன்று, உடலை மலையில் வீசிய பெண்!
மும்பை அருகிலுள்ள கசரா மலைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இரண்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உள்ளூர் மக்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனை செய்ததில், அவர்கள் இருவரும் கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இருவரும் யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வந்தது. அதோடு அவர்களின் உடலை யார் கொண்டு வந்து போட்டது என்று கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். … Read more