உத்தரபிரதேசத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 9 பக்தர்கள் உயிரிழப்பு..!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் நேற்று முன்தினம் ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் புறப்பட்டனர். டிராக்டரில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பேர் இருந்தனர். தாஜ்புரா என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, டிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிக்கெட்டு ஓடிய டிராக்டர் சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அப்போது கால்வாயில் நீரோட்டம் வேகமாக … Read more

2023 Tata Nexon Facelift – 2023 டாடா நெக்ஸான் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது

வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட 2023 டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் பேம்பட்ட புதிய நவீனத்துவமான டிசைன் அம்சத்தை பெற உள்ள நெக்ஸானில் 11 விதமான வேரியண்டுகள் வரவுள்ளது. நெக்ஸான் எஸ்யூவி காருக்கு போடியாக  மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சோனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது. … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி-க்கு இடம் உண்டா?!

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன என்றாலும், அந்தத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதில், எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பா.ஜ.க இடம்பெற்றிருக்கும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன, இருக்கப்போகின்றன என்பது பற்றிய தெளிவு இன்னும் ஏற்படவில்லை. பன்னீர், தினகரன், எடப்பாடி குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க ஆகியவை அ.தி.மு.க – பாஜக கூட்டணியில் இடம்பெறுமா … Read more

ஆகஸ்ட் 25: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 79ரூபாய் 50 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

1 ஸ்வீட் நியூஸ்.. திடுதிப்பென்று சொன்ன தமிழ்நாடு அரசு.. ஆவினின் அடுத்த அறிவிப்பு பாருங்க.. சபாஷ்

தர்மபுரி: தமிழக மக்களுக்கு இனிப்பு செய்தியை அறிவித்துள்ளது தமிழக அரசின் பால்வளத்துறை.. இதற்கான அறிவிப்பை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்த அதிரடியை ஆவின் கையில் எடுத்து வருகிறது.. சமீபத்தில்கூட, மிக குறைந்த கொழுப்பு சத்துள்ள பாலை தயாரித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்ய போகிறதாம்.. அதுவும் விலை Source Link

காவிரி வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவு| Cauvery case: Management authority directed to file affidavit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.,1 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி குறுவை பயிர்களை காப்பாற்றுவதற்காக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரிக்க … Read more

'நீட்' தேர்வு விடைத்தாளை திருத்தி மோசடி – ஆந்திர மாணவிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

புதுடெல்லி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த தேர்வில் 697 மதிப்பெண் பெற்றதாகவும், ஆனால் இணையதளம் மூலம் மருத்துவக்கல்விக்காக விண்ணிப்பிக்க முயன்றபோது, தனது மதிப்பெண் 103 என காட்டுவதாகவும் இதனால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும் கூறி ஆந்திர மாணவி ஒருவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விடைத்தாள் நகலையும் சமர்ப்பித்த அவர், தனது விடைத்தாளில் திருத்தம் செய்திருப்பதாக தேசிய தேர்வு முகமை … Read more

அப்பா வாட்ச்மேன்; துரத்திய வறுமை; சந்திரயான் 3 திட்டக் குழுவின் இளைஞன் பரத் சாதித்த கதை!

சந்திரயான் 3, லேண்டர் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்து இந்தியா வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது இந்தச் செய்தி. இதற்கு பிரதமர், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் மட்டுமின்றி மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து சந்திரயான் 3-ன் திட்ட இயக்குநரான வீர முத்துவேல், இஸ்ரோ தலைவர் சோம்நாத், விஞ்ஞானிகள் தாமோதரன், கார்த்திகேயன் என்று இஸ்ரோவில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் … Read more

நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி! உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி…

சென்னை: நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். எடப்பாடி தலைமையில் நடைபெற்ற  அதிமுக பொதுக்குழுவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், ஓபிஎஸ் நீக்கம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த  தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என கூறியதுடன், ஓபிஎஸ் மனுக்களை தள்ளுபடி … Read more

எங்களுக்கும் தருமபுரம் ஆதீனத்துக்கும் காலம் காலமாக உள்ள நட்பு! உரிமையை விட்டுத்தராத ஸ்டாலின்!

மயிலாடுதுறை: தங்களுக்கும் தருமபுரம் ஆதீனத்துக்கும் இருக்கும் குடும்ப நட்பு குறித்து உரிமையை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தருமை ஆதீனத்துக்கு கட்டுப்பட்ட 27 கோவில்களில் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள கோவிலும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான முதல்வர் ஸ்டாலின் பேச்சு வருமாறு; ”16ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்ட மிக Source Link