நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்: சாலைமறியலில் ஈடுபட்ட 2,400 பேர் கைது

ஹேக், காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சினையாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காண கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நெதர்லாந்து நாட்டில் புதை படிவ எரிபொருட்களை பிரித்தெடுக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. இதனால் அரசாங்கத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள ஏ-12 நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் … Read more

KTM 250 Duke price – 2024 கேடிஎம் 250 டியூக் பைக்கின் விலை மற்றும் சிறப்புகள்

கேடிஎம் நிறுவனத்தின் புதிய 250 டியூக் பைக் பல்வேறு மேம்பாடுகளை 390 டியூக்கில் இருந்து பெற்றதாக அமைந்து விற்பனைக்கு ரூ.2.39 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலாக 250 டியூக் விளங்குகின்றது. இன்று முதல் KTM இணையதளம் அல்லது நாடு முழுவதும் உள்ள கேடிஎம் ஷோரூம் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டு, கட்டணமாக ரூ.4,499 வசூலிக்கப்படுகின்றது. விரைவில் டெலிவரி துவங்கப்பட உள்ளது. 2024 KTM 250 Duke கேடிஎம் 390 டியூக் பைக்கை தொடர்ந்து … Read more

Chandrababu Naidu: 14 நாள் நீதிமன்ற காவல்; கொண்டாடிய YSR காங்கிரஸ்! – பந்த் அறிவிப்பால் பதற்றம்!

ஆந்திர மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்குச் சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சனிக்கிழமை காலை 6 மணியளவில் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நேற்று காலை விஜயவாடா ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சந்திரபாபு நாயுடு. நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “அரசியல் … Read more

பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: ராமநாதபுரம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில், உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி, ராமநாதபுரம், பரமக்குடியில்  நகராட்சிக்கு சொந்தமான  இடத்தில் ரூ. 3 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு … Read more

நொறுங்கிய மக்கள்.. குலை நடுங்க வைக்கும் மொராக்கோ.. 2100ஐ தாண்டிய பலி.. காவு வாங்கிய பூகம்பம்!

ரபாத்: மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2100-ஐ தாண்டியது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 2122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,370 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோவின் ஹை அட்லஸ் மலைகளை உலுக்கிய நிலநடுக்கம்தான் இந்த சேதத்திற்கு மிகப்பெரிய காரணம். அந்நாட்டு வரலாற்றில் ஏற்பட்ட Source Link

சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது: மத்தியபிரதேச முதல்-மந்திரி ஆவேசம்

போபால், மத்தியபிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், “சனாதன தர்மம் அனைவரின் நலனையும் விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சனாதன தர்மத்தை மோசமான நோய்களுடன் ஒப்பிடுகின்றனர். சனாதன தர்மத்தை அவமதிப்பதை யாராவது பொறுத்துக்கொள்வார்களா? அரசியலில் மதத்தை இழிவுபடுத்தும் காங்கிரசின் சதி எந்த வகையிலும் … Read more

2024 KTM 390 Duke Price – ரூ.3.10 லட்சத்தில் 2024 கேடிஎம் 390 டியூக் விற்பனைக்கு வெளியானது

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 டியூக் 2024 ஆம் ஆண்டு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மாடலின் முக்கிய சிறப்பம்சங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட டிசைன் அம்சம், புதுப்பிக்கப்பட்ட என்ஜின், அதிகப்படியான பவர் ஆகியவற்றுடன் புதிய ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் பெற்றதாக வந்துள்ளது. 2024 KTM 390 Duke முதலில் கேடிஎம் 390 டியூக் மாடலில் என்ஜின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட 398.7cc LC4c … Read more

“தமிழக அரசின் செயல்பாடு குறித்து நான் இன்னும் மதிப்பெண் போடவில்லை”- பாமக நிறுவனர் ராமதாஸ்

“நம் நாட்டிற்கு தற்போது உள்ள இந்தியா என்ற பெயரே போதும். பாரத் என்ற பெயர் தேவையில்லை என நான் கருதுகிறேன். தமிழக அரசின் இரண்டு ஆண்டு செயல்பாடு குறித்து நான் இன்னும் மதிப்பெண் போடவில்லை” என கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். டாக்டர் ராமதாஸ் கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 85 -வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு 85 சீர்வரிசை … Read more

பஞ்சர் ஆனதால் வந்த கொடூரம்.. திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி.. கதறிய பெண்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்று இவர் வீடு திரும்பி உள்ளனர். வீடு திரும்பும்போது வேன் பஞ்சரானதால், சாலையின் நடுவே அமர்ந்திருந்தபோது விபத்து Source Link