நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! உயர்நீதிமன்ற நீதிபதி ‘ஓப்பன் டாக்..!’

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவது குறித்தும், அதுதொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின், நீதி குறித்த விமர்சனம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக, நீதி வளைக்கப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.  சமீப காலமாக  கீழமை நீதிமன்றங்களால் அமைச்சர்கள்மீதான வழக்குகள் ரத்து … Read more

சந்திரபாபு நாயுடு கைது.. டயர்களை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல்.. கடையடைப்பு!

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆங்காங்கே கடைகளை அடைத்தும் சாலை மறியல் செய்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் Source Link

Toyota Century – உயர்தர டொயோட்டா செஞ்சுரி எஸ்யூவி அறிமுகமானது

டொயோட்டா நிறுவனததின் ஆடம்பர வசதிகளை பெற்ற எஸ்யூவி மாடலாக செஞ்சுரி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. செடான் ரக மாடல் ஒன்று ஜப்பானில் மட்டும் விற்பனை செய்யப்படும் நிலையில், எஸ்யூவி ரக மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு முதல் டொயோட்டா செஞ்சுரி மாடல்களில் “பீனிக்ஸ் இலச்சினை” பயன்படுத்துவது வழக்கமாகும். அதனை தொடர்ந்து உறுதிப்படும் வகையில் இந்த புதிய பிரீமியம் எஸ்யூவி மாடலிலும் Phoenix லோகோ கிரில்லில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. … Read more

Doctor Vikatan: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரும் பீரியட்ஸ்… அப்படியே விடலாமா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு ‌‌2 வருடங்களாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ ‌‌‌அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோதான் பீரியட்ஸ் வருகிறது. கடைசியாக பீரியட்ஸ் வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது. இது ஏன்… இதனால் ஏதாவது பிரச்னைகள் ‌‌வருமா? – சிவனேஸ்வரி‌, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: பலன் தராத வெயிட்லாஸ் … Read more

ஜனநாயக அமைப்புக்கள் மீது இந்தியாவில் முழு அளவில் தாக்குதல் : ராகுல் காந்தி

பிரசல்ஸ், ராகுல் காந்தி தனது பெல்ஜிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்புக்கள் தாக்கப்படுவதாகக் கூறி உள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர்  இதில் முதலாவதாக பெல்ஜியம் சென்று தலைநகர் பிரஸ்சல்சில் வாழும் இந்திய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது “இந்தியர்கள் மற்றும் பெல்ஜியம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு இனிமையான கலந்துரையாடல் நடந்தது. அப்போது இந்தியா-ஐரோப்பா இடையேயான உறவு, மாறிவரும் … Read more

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. தமிழக ஆந்திர எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

அமராவதி: ஆந்திரா முன்னாள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து ஆந்திராவில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். ஆந்திரா முதல்வராக 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் Source Link

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி – எடியூரப்பா

பெங்களூரு, முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவருமான தேவேகவுடா நேற்று முன்தினம் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கர்நாடகத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி … Read more

எஸ்.பி.பாலசுப்ரமணியம்: `கடவுளைப் போலவே கருணை கொண்டவர்களையும் தொழவேண்டும்!' – அதுவே என் ஆன்மிகம்!

கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுறது, விரதம் இருப்பது மட்டும் ஆன்மிகம் இல்லை. சக மனிதரை மதிப்பது, தன் மீது கருணையும் அன்பும் கொண்டவர்களை ஆராதிப்பது, இதுதான் ஆன்மிகம். அதை எப்போதும் செஞ்சுக்கிட்டே இருக்கணும் என்பதுதான் என் ஆசை. நான் நல்ல பாடகன் என்பதைவிட நல்ல மனுஷன்னு பேர் வாங்கணும். அதான் முக்கியம்!’ என்றார் எஸ்.பி.பி. இவர் குரலாலோ சாதனைகளாலோ மட்டும் நினைவு கூரத்தக்க மகத்தான கலைஞன் இல்லை. தனது கருணையாலும் பொறுமையாலும் இறைநிலையை எட்டிவிட்ட மஹான் இவர் … Read more

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்சீலி, திருச்சி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்சீலி, திருச்சி மாவட்டம். பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டித் தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள். அவள் சப்த கன்னிகளிடம், “நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து … Read more