எதிர்க்கட்சிகள் அமளியால் திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டில்லி எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் புயலைக் கிளப்பியது.  இன்று மக்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எனவே மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பிறகு அவை கூடியதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையொட்டி மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வரும் திங்கட்கிழமை கூட … Read more

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி

வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இப்பகுதியில் இந்தியத் தொல்லியல்துறை அறிவியல் பூர்வ கள ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை எழுப்பின. அந்த அமைப்புக்கள் இது குறித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த 14ஆம் தேதி இந்த … Read more

இன்றைய ராசிபலன் 22.07.23 | Horoscope | Today RasiPalan | சனிக்கிழமை | July 22 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ  பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3 ஆம் நீதிபதி கார்த்திகேயன் தமது விசாரணைக்குப் பின்பு, செந்தில் … Read more

மணிப்பூர் சம்பவம்.. சட்டசபையில் ராஜஸ்தான் அமைச்சர் பேச்சு.. ஆடிப்போன அசோக் கெலாட்.. உடனே டிஸ்மிஸ்

India oi-Velmurugan P ஜெய்ப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக, மணிப்பூர் வன்முறை விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசிய அம்மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மணிப்பூரில் இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூரமான வீடியோவை பார்த்து வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி,மிகுந்த வேதனையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் நிற்கிறேன். மணிப்பூர் மகள்களுக்கு நேர்ந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. … Read more

Drenched Sabarimala Devotees Kerala High Court Case | நனைந்த சபரிமலை பக்தர்கள் கேரள ஐகோர்ட் வழக்கு

சபரிமலை:சபரிமலையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள், நீண்ட நேரம் மழையில் நனைந்தபடி காத்து நின்றது தொடர்பாக, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த கேரள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கோரியுள்ளது. சபரிமலையில், ஆடி மாத பூஜை ஜூலை 17 முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த காலத்தில், சபரிமலையில் பலத்த மழை பெய்தது. பம்பை முதல் சன்னிதானம் வரை செல்லும் பாதையில், பக்தர்கள் தங்குவதற்காக காத்திருப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த அறைகள் திறக்கப்படாததால் தரிசனத்துக்காக … Read more

Harley-Davidson Nightster 440 – ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் 440 அறிமுகம் எப்பொழுது

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் அடுத்து நைட்ஸ்டர் 440 (Nightster 440) பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்காக பெயருக்கு காப்புரிமை கோரி பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ரூ.2.29 லட்சம் முதல் ரூ.2.69 லட்சம் விலையில் வெளியிடப்பட்ட X440 ரெட்ரோ ஸ்டைலை கொண்ட மாடலாக அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. Harley-Davidson Nightster 440 இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் துவக்க நிலை பைக்குகளை தயாரிக்கவும், நாடு முழுவதும் உள்ள டீலர்களை செயற்படுத்தவும், மற்ற பிரீமியம் … Read more

விழுப்புரம்: மரத்திலிருந்து காய்ந்து விழுந்த இலைகள்; உருவான பங்காளி சண்டை… கொலையில் முடிந்த சோகம்!

விழுப்புரம் அருகேயுள்ள பா.வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு சிவசங்கரி என்ற பெண்ணுடன் 13 வருடங்களுக்கு முன்பாக திருமணமாகியிருக்கிறது. இந்தத் தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். ஹரிகிருஷ்ணனின் வீடும், அவரின் பெரியப்பா மகன் ஆனந்தராஜ் என்பவரின் வீடும் பக்கத்து பக்கத்திலேயே அமைந்திருக்கின்றன. ஆனந்தராஜ் இடத்தில் அமைந்திருக்கும் பூவரச மரத்திலிருந்து காய்ந்த இலைச்சருகுகள் கீழே விழுந்து, ஹரிகிருஷ்ணன் வீட்டுப் பகுதியில் குப்பைகளை ஏற்படுத்துவதாலும், சாக்கடை … Read more

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து பொதுமக்களால் சிறை பிடிப்பு

திருத்தணி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசுப் பேருந்தை திருத்தணி மக்கள் சிறை பிடித்து மறியல் செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திருத்தணிக்குப் பேருந்தில் சென்று படிக்கும் சூழல் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல பேருந்தைத்தான் நம்பி உள்ளனர். கடந்த சில நாட்களாகப் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முருகூர் பேருந்து நிறுத்தத்தில் … Read more

கொலை விமர்சனம்: டெக்னிக்கலாக ஓகே; ஆனால் வித்தியாசமான உலகில் நடக்கும் வழக்கமான துப்பறியும் கதைதான்!

மெட்ராஸில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார் பிரபல மாடலான லைலா (மீனாட்சி சவுத்ரி). இந்தக் கொலை வழக்கானது புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரியான சந்தியாவிடம் (ரித்திகா சிங்) ஒப்படைக்கப்படுகிறது. சந்தியாவின் குருவும், துப்பறியும் நிபுணருமான முன்னாள் காவல்துறை அதிகாரி விநாயக் (விஜய் ஆண்டனி) அவருக்கு இவ்வழக்கில் உதவுகிறார். கொலையின் பின்னணியை ஒவ்வொன்றாக துப்புத்துலக்க ஆரம்பிக்கிறார் விநாயக். கொலை விமர்சனம் ஒருகட்டத்தில், கொலை செய்யப்பட்ட லைலாவின் போட்டோகிராபர் அர்ஜுன் (அர்ஜுன் சிதம்பரம்), நண்பர் … Read more