மத்திய அமைச்சர் வீட்டில் இறந்து கிடந்த இளைஞர்; அமைச்சரின் மகன் பெயரிலுள்ள துப்பாக்கி பறிமுதல்!
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் பா.ஜ.க-வை மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீட்டில் இளைஞர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் விசாரணையில், வினய் ஸ்ரீவஸ்தவா (Vinay Srivastava) என்றறியப்படும் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த இளைஞர், அமைச்சரின் மகனான விகாஸ் கிஷோரின் நண்பர் எனத் தெரியவந்திருக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்ட வினய் ஸ்ரீவஸ்தவா இதுமட்டுமல்லாமல் முக்கியமாக, சம்பவம் நடந்த வீட்டில், அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோர் பெயரில் பதிவுசெய்யப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர். அதோடு, சம்பவம் தொடர்பாக … Read more