பல்லாவரம் ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Capitaland – Radial IT Park சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை பல்லாவரம் ரேடியல் சாலையில்  திறந்து வைத்தார். சுமார், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் கேபிடல் லேண்ட் டெக்னோ பார்க் என்ற தனியார்  தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி … Read more

எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு கோஷம்- ’தாத்தா’ முத்துராமலிங்க தேவரை அவமதிப்பதற்கு சமம்- சீமான் கண்டனம்

பசும்பொன்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முழக்கங்களை எழுப்பியது அருவறுக்கத்தக்கது,அநாகரீகமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் Source Link

சேலம்: காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பள்ளிக்கூடத்தின் சுவரில் மனிதமலம் பூசிய மர்ம நபர்கள்

சேலம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே காவிரிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 1958-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 170 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ய்ஜிங்கள்கிழமை விடுமுறை தினம் முடிந்து, வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பள்ளியின் … Read more

இந்திரா காந்தி நினைவு நாள்: டெல்லி நினைவிடத்தில் கார்கே, சோனியா, ராகுல் மரியாதை…. வீடியோ

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி,  டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள்  சோனியா காந்தி, ராகுல் காந்தி  உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினார். இருப்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, 1984 அக்டோபர் 31ஆம் தேதி, தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் ஆகிய சீக்கிய மதக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவுதினம் ஆண்டுதோறும்  … Read more

`முதலில் ரூ.20 கோடி, பிறகு 200 கோடி, இப்போது 400 கோடி’ – முகேஷ் அம்பானிக்கு தொடரும் கொலை மிரட்டல்கள்

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராக கருதப்படும் முகேஷ் அம்பானிக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டலில் ரூ.20 கோடி கொடுக்கவில்லையெனில் கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தது. கடந்த 28-ம் தேதி மீண்டும் ஒரு கொலை மிரட்டல் வந்தது. அதில் ரூ.200 கோடி ரூபாய் கொடுக்கவில்லையெனில் உனது மரண சாசனத்தில் கையெழுத்திடப்படும் என்று அதில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மிரட்டல்களை தொடர்ந்து ஏற்கனவே அம்பானிக்கு … Read more

மசோதாக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. மனுவில்,  கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர் என் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. ஆளுநர் குறித்து திமுக பத்திரிகையான முரசொலியில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதுபோல திமுகவினரும் ஆளுநரை கடுமையான சொற்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில்  சமீபத்தில் ஆளுநர் மாளிகை வாசலில் … Read more

பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அடித்துவிரட்டுவதைப் போல ஒருநாள் தமிழரை வட இந்தியர்கள்… எச்சரிக்கும் சீமான்

பசும்பொன்: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் வன்முறை அதிகரிப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல இன்னர் லைன் பெர்மிட் முறையை அமல்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: வடமாநிலத்தவர் சென்னையில் போலீசாரை தாக்கியது ஒரு தொடக்கம்தான். இதேபோல நிறைய நடைபெறப் போகிறது. நிறைய நடக்கும். Source Link

More than 10 buses were destroyed in a fire during welding | வெல்டிங் வைத்தபோது தீ விபத்து 10க்கும் மேற்பட்ட பஸ்கள் எரிந்து நாசம்

பெங்களூரு, பெங்களூரில், ‘காரேஜ்’ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் தீயில் எரிந்துநாசமாகின. கர்நாடகா தலைநகர் பெங்களூரு வீரபத்ரா நகரில், ‘சீனிவாஸ் கோச் ஒர்க்ஸ்’ நடத்தி வருபவர் சீனிவாஸ். கடந்த 15 ஆண்டுகளாக இங்கு பஸ்களை பழுது பார்த்து வருகிறார்; 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று காலை 11:30 மணிக்கு, ‘ஸ்லீப்பர் பஸ்’ ஒன்றில், … Read more

மராத்தா போராட்டம்: மாநிலம் முழுவதும் வெடித்த வன்முறை… அரசியல்வாதிகளின் அலுவலகங்களுக்கு தீ வைப்பு!

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்திற்கு முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு கொடுத்த இடஒதுக்கீட்டை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து மராத்தா இட ஒதுக்கீட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மனோஜ் இரண்டாவது முறையாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் உடல் நிலை நேற்று மோசமடைந்தது. அரசு இவ்விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்காத வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மராத்தா சமுதாய மக்கள் வன்முறையை கையில் எடுத்துள்ளனர். நேற்று காலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.பிரகாஷ் வீடு … Read more